Published:Updated:

ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்போம்: நல்லக்கண்ணு

Vikatan Correspondent
ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்போம்: நல்லக்கண்ணு
ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்போம்: நல்லக்கண்ணு
ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்தெடுக்க ஆதரவளிப்போம்: நல்லக்கண்ணு

விழுப்புரம்: நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்து எடுக்க ஆதரவு கொடுப்போம் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் நல்லக்கண்ணு , ''மத்தியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வரும் காங்கிரஸ், புதிய பொருளாதார கொள்கை என்ற அடிப்படையில் அன்னிய மூலதனத்தை அனுமதித்துள்ளனர். சிறுதொழிலும், ராணுவ தளவாடங்களிலும் அன்னிய மூலதனத்திற்கு அனுமதித்துள்ளனர். இது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவிக்கும். எனவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை அகற்றுவதற்கு இடதுசாரி கட்சிகளும் மற்ற மாநில கட்சிகளும் சேர்ந்து மாற்று அணியை அமைத்து வருகிறோம்.

இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டு, அதிக எண்ணிக்கையில் உள்ள கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்று கூடி தங்கள் தலைவராக யாரை தேர்ந்து எடுக்கிறார்களோ அவர்கள் தான் பிரதமராக முடியும். ஆனால், பா.ஜ.க. நரேந்திர மோடியையும், காங்கிரஸ் ராகுல் காந்தியையும் அடுத்த பிரதமர் என்று கூறி பிரசாரம் செய்து வருவது ஜனநாயக விரோத செயலாகும்.

காங்கிரஸ், பா.ஜ.க.வுக்கு எதிராக இடதுசாரி கட்சிகள், 11 மாநில கட்சிகளுடன் இணைந்து மாற்று அணியை உருவாக்கி வருகிறோம். இந்த அணி வலுப்பெற்று வருகிறது. மத்தியில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத ஆட்சி அமைய வேண்டும். இந்த 2 கட்சிகளும் இல்லாத மாற்று அணி வெற்றி பெற்றால் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை பிரதமராக தேர்ந்தெடுக்க நாங்கள் ஆதரவு கொடுப்போம். தேர்தல் முடிந்த பிறகு அதற்கு வாய்ப்பு வரும்" என்றார்.