Published:Updated:

தலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி!

தலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி!

தலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி!

தலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி!

Published:Updated:
தலையங்கம் - நான் வளர்கிறேனே, மாமி!

ராசரி மனிதனை உயர்த்தி உச்சத்துக்குக் கொண்டுசெல்வதே தன்னுடைய லட்சியம் என்று சொல்லி 'ஆம் ஆத்மி’ முழக்கம் போடும் இயக்கம் காங்கிரஸ். இதோ... இப்போதைய காங்கிரஸ் ஆட்சியில் ஒரு 'சராசரி' மனிதர் மிகக் குறுகிய காலத்தில் எந்த அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறார் என்பதற்கு ஆதாரங்கள் அடுக்கடுக்காகக் குவிகின்றன!  

 பித்தளை வியாபாரம் நடத்திய சாமானியக் குடும்பத்தைச் சேர்ந்த அந்த மனிதருக்கு, மிகப் பெரிய கட்டுமான நிறுவனம் ஒன்று நயா பைசாகூட வட்டி வாங்காமல், ஒரு குண்டுமணிகூட அடமானம் பெறாமல், 65 கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்திருக்கிறது. அந்த சராசரி மனிதரின்  அசுர வளர்ச்சிக்குப் பாடுபட்ட அந்த நிறுவனத்தைத் தட்டிக்கொடுக்க வேண்டாமா? காங்கிரஸ் ஆட்சி செய்யும் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் ஹரியானா மாநிலங்களில் அடிமாட்டு விலையில் ஏக்கர் ஏக்கராக அந்த நிறுவனத்துக்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இப்படி ஒரு தனி மனிதரின் வாழ்க்கைத் தரம் உயருவதற்காக மேற்கொண்ட முயற்சிகளை காங்கிரஸ் கட்சி துளிகூட விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. தன்னடக்கத்தின் அருமை புரியாத சிலரோ, 'மாபெரும் ஊழல் நடந்துவிட்டது' என்று சந்திக்கு வந்து குற்றம்சாட்டுகிறார்கள். காங்கிரஸ் மீது எத்தனைதான் புகார்கள் எழுந்தாலும்... அவற்றை எல்லாம் சோனியாவும் பிரதமரும் மற்ற ராஜபிரதானிகளும், துளிகூடப் பதற்றமே இல்லாமல் 'இரும்பு உள்ள'த்தோடு எதிர்கொள்வதைப் பார்த்த பிறகாவது, குற்றம் சாட்டுவோர் திருந்தி இருக்கலாம். மாறாக, காங்கிரஸாலும் கட்டுமான கம்பெனியாலும் அக்கறையோடு வளர்க்கப்பட்ட அந்தச் 'சாதாரண மனிதர்' சோனியா காந்தியின் மருமகன் என்ற ஒரே காரணத்துக்காகப் 'பொறாமை' தாளாமல் புலம்பித் தள்ளுவதை ஜீரணிக்க முடியவில்லை!

அலைக்கற்றை, காமன் வெல்த், நிலக்கரி என்று சோனியா குடும்பத்துக்கு வெளியில் இருந்தவர்களைக் குறிவைத்து புகார்கள் எழுந்தபோதே... அவர்களை எல்லாம் பாசத்தோடு கட்டிக்காத்த கட்சி அல்லவா காங்கிரஸ்... கட்சித் தலைவியின் மருமகனுக்கே ஒரு பிரச்னை என்று வரும்போது, அத்தனை சுலபத்தில் விட்டுக்கொடுத்துவிடுவார்களா என்ன?!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism