Published:Updated:

சீமாந்திரா தலைநகர்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!

Vikatan Correspondent
சீமாந்திரா தலைநகர்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
சீமாந்திரா தலைநகர்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!
சீமாந்திரா தலைநகர்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்!

ஹைதராபாத்: சீமாந்திரா தலைநகரை அங்கு அமையும் புதிய அரசின் பங்குடன்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தை பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கபட்டுள்ளது. தெலுங்கானாவுக்கும், சீமாந்திரா பகுதிக்கும் 10 ஆண்டுகள் ஹைதராபாத் பொது தலைநகராக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய தலைநகர் தேர்வுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தெலுங்கு தேச கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறும்போது, ''சீமாந்திரா பகுதியை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லும் தகுதி தெலுங்கு தேசம் கட்சிக்கு மட்டுமே உள்ளது. ஹைதராபாத் நகரம் தெலுங்கு தேசம் கட்சியால்தான் உருவாக்கப்பட்டது. பிரிந்து கிடக்கும் தெலுங்கு மக்களிடம் ஒற்றுமையை வளர்க்க தெலுங்கு தேசத்தால் மட்டுமே முடியும்.

முதலமைச்சராக இருந்த கிரண்குமார் ரெட்டி எதை சாதித்து விட்டார். மாநில பிரிவினைக்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கி போராடியபோது, அவர் வீட்டில் இருந்து கோப்புகளில் கையெழுத்திட்டு பணம் சம்பாதித்துக் கொண்டு இருந்தார். ஜெகன் மோகன் ரெட்டிக்கு சஞ்சல்குடா ஜெயில்தான் தெரியும்.

காங்கிரஸ் கட்சிக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு அலை வீசுகிறது. சீமாந்திராவுக்கு தலைநகர் அமைக்கும் பொறுப்பை அங்கு அமையும் புதிய அரசின் பங்குடன்தான் உருவாக்க வேண்டும்" என்றார்.