Published:Updated:

ஈகிள் டி.வி

சுகுணா திவாகர்

ஈகிள் டி.வி

சுகுணா திவாகர்

Published:Updated:
##~##

மது பிரதமர் ரிமோட்டை அழுத்துகிறார்.
நமது பிரதமர் தொலைக்காட்சியில்
பேசத் துவங்குகிறார்.
முதலில் குழப்பத்தைத் தவிர்த்துக்கொள்வோம்
(குறைந்தபட்சம் கவிதையிலாவது)
நமது பிரதமர் (நம்பர் ஒன்) ரிமோட்டை அழுத்துகிறார்.
நமது பிரதமர் (நம்பர் டூ) தனது முதல் சாதனையாகப் பேசத் துவங்குகிறார்.
'பொருளாதாரச் சீர்திருத்தம் சிறிதளவிலேனும்
வலியை ஏற்படுத்தத்தான் செய்யும்’ என்று
நமது பிரதமர் பேசிக்கொண்டிருக்கும்போது
நல்ல வேளையாக அப்போது அந்தத் தொலைக்காட்சியில்
விவசாயிகள் தற்கொலைகுறித்த ஃப்ளாஷ் நியூஸ்கள் ஏதும் ஓடாதது
நமது தேசத்தின் (நம்பர் ஒன்) நற்பேறுதான்.
'நெருக்கடியான காலகட்டத்தில் சிக்கனத்தைக்
கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்’ என்றவாறே
சிக்கனமாய் ஒரு புன்னகையை உதிர்க்கிறார் நமது பிரதமர்.

ஈகிள் டி.வி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'பணம் ஒன்றும் மரத்தில் காய்ப்பதில்லை’ என்று அதிசயத்திலும் அதிசயமாக
சன்னமாக ஆவேசப்படுகிறார் நமது பிரதமர்.
அப்படியான மரங்களை வளர்க்கும் திட்டம் எதுவும்
மத்திய அரசிடம் இல்லை என்பதை
நாம் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.
'அந்நிய முதலீடு வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும்’ என்று
நமது பிரதமர் வார்த்தைகளைக் கோத்துக்கொண்டிருந்தபோது
நல்வாய்ப்பாக அயல் மாநிலத் தொழிலாளர்கள்
அவசர அவசரமாக வெளியேறிக்கொண்டிருந்த சித்திரம்
உங்கள் மனக்கண்ணில் தோன்றாமல் இருந்தது
நமது தேசத்தின் (நம்பர் டூ) நற்பேறுதான்.
மெய்யாலுமே உங்களுக்கு நினைவில் வர வேண்டியது
'நாடு உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே
நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேள்’ என்ற பொன்மொழிதான்.
ஆனாலும் 'எந்த நாட்டுக்கு?’ என்று நீங்கள் கேட்பது
அதிகப்பிரசங்கித்தனம்தான்.
நாட்டையும் மக்களையும்விட
நாடாளுமன்றம் மேலானது.
நாடாளுமன்றத்தையும்விட
நம்பர் ஒன் பிரதமர் மேலானவர் என்பதை
அழுத்தந்திருத்தமாக உணர்த்திய திருப்தியில்
பார்வையாளர்களுக்கு முதுகைக் காட்டியவாறே
திரும்பி நடக்கிறார் நமது பிரதமர் நம்பர் டூ.
அதே திருப்தியுடன் ரிமோட்டை அழுத்துகிறார் நமது பிரதமர்.
தொலைக்காட்சி சட்டென அணைகிறது.
அது அமெரிக்கக் கழுகு சிறகு விரிப்பதைப் போலத்தான் இருந்தது!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism