Published:Updated:

லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு!

Vikatan Correspondent
லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு!
லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு!
லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு!

பாட்னா:  தமது கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக  லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ள குற்றச்சாட்டை மறுத்துள்ள நிதிஷ் குமார், அதே சமயம் தனது கட்சியில் யார் வேண்டுமானாலும் சேரலாம் என அழைப்பு விடுத்துள்ளார்.

லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளம், வருகிற பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கிறது. இந்த நிலையில், லாலு பிரசாத் கட்சியில் உள்ள 22 எம்.எல்.ஏ.க்களில் 13 பேர், அந்த கட்சியில் இருந்து விலகுவதாக சபாநாயகர் உதய் நாராயண் சவுத்ரிக்கு அவர்கள் கடிதம் அனுப்பி வைத்தனர். மேலும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அரசுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பின்னர் விலகுவதாக அறிவித்த எம்.எல்.ஏ.க்களில் 6 பேர் தங்கள் முடிவில் இருந்து திடீர் பல்டி அடித்தனர். 6 பேரும், ‘‘கட்சியில் இருந்து விலகுவதற்காக நாங்கள் கடிதத்தில் கையெழுத்திடவில்லை. சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவதற்காக எங்களிடம் கையெழுத்து வாங்கினார்கள்’’ என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக இன்று லாலு பிரசாத் தலைமையில் அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் அவசர

லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் குமார் அழைப்பு!

கூட்டம் நடைபெற உள்ளது. விரைவில் பாராளுமன்றத் தேர்தல் நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக பேசியுள்ள லாலு பிரசாத் யாதவ், பா.ஜனதா கட்சியும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியும் எனது கட்சிக்கு எதிராக சதிதிட்டம் தீட்டி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக நிதிஷ் குமாரை கடுமையாக சாடிய லாலு, "நிதிஷ் குமார், அரசு மைனாரிட்டி அரசாக பெரும்பான்மை பலமிழந்துபோய்விட்டது. இதனால் அவர் விரக்தி அடைந்து எனது கட்சி எம்.எல்.ஏ.க்களை இழுக்கவும், கட்சியை உடைக்கவும் முயற்சிக்கிறார்" என குற்றம் சாட்டியுள்ளார்.

லாலு கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு நிதிஷ் அழைப்பு

ஆனால் இந்த குற்றச்சாட்டை நிதிஷ் குமார் மறுத்துள்ளார்.அதே சமயம் தமது ஐக்கிய ஜனதா தளக் கட்சியில் சேர யார் விரும்பினாலும் அவர்களை தாம் வரவேற்பதாகவும், அவர்களை தாம் தடுக்கப்போவதில்லை என்றும், இதற்காக தங்களை யாரும் குற்றம் சொல்ல முடியாது என்றும் பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார் தெரிவித்தார்.