Published:Updated:

கருணாநிதி மீதான தேர்தல் வழக்கு: தடை நீட்டிப்பு செய்து ஐகோர்ட் உத்தரவு!

Vikatan Correspondent
கருணாநிதி மீதான தேர்தல் வழக்கு: தடை நீட்டிப்பு செய்து ஐகோர்ட் உத்தரவு!
கருணாநிதி மீதான தேர்தல் வழக்கு: தடை நீட்டிப்பு செய்து ஐகோர்ட் உத்தரவு!
கருணாநிதி மீதான தேர்தல் வழக்கு: தடை நீட்டிப்பு செய்து ஐகோர்ட் உத்தரவு!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது தொடரப்பட்ட தேர்தல் வழக்கின் விசாரணைக்கு மேலும் ஒரு வாரம் தடை நீட்டிப்பு செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தி.மு.க. தலைவர் கருணாநிதி 2011ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அப்போது அவர் தாக்கல் செய்த தேர்தல் வேட்பு மனுவில், அவருடைய தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடம் இருக்கும் இடத்தை சொத்து பட்டியலில் குறிப்பிடவில்லை.

இதை எதிர்த்து கருணாநிதி மீது திருவாரூர் கோர்ட்டில் தேர்தல் அதிகாரி (வட்டார வருவாய் அதிகாரி) வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து, மார்ச் 7ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், சம்மனை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி.செல்வம், திருவாரூர் கோர்ட்டில் உள்ள வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, ஏற்கனவே விதித்த தடைக்கு மேலும் ஒரு வாரம் தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.