Published:Updated:

ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு!

Vikatan Correspondent
ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு!
ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு!
ஆந்திரா பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் மனு!

சென்னை: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தனி தெலங்கானா மாநிலம் உருவாக்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர்.கிருஷ்ணன் ஒரு மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், ''ஆந்திரா மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையில் அரசியல் அமைப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை.

மேலும், ஜனாதிபதி சுயமாக முடிவு எடுக்க வேண்டும். அமைச்சரவை அறிவுரையை ஏற்ககூடாது. ஆந்திரா மாநிலம் பிரிக்கப்பட்டது அரசியல் வழிமுறை மீறல். எனவே, ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்ததை ரத்து செய்ய வேண்டும்'' எனக் கூறப்பட்டுள்ளது.


மேலும், இந்த மனுவை, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, நீதிபதி ராஜேந்திர பாபு ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு தாக்கல் செய்தார். இதையடுத்து, இந்த மனு விசாரணைக்கு தகுந்ததா என்பது குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.