Published:Updated:

ஜெயலலிதா முன்னிலையில் 12,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்!

Vikatan Correspondent
ஜெயலலிதா முன்னிலையில் 12,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்!
ஜெயலலிதா முன்னிலையில் 12,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்!
ஜெயலலிதா முன்னிலையில் 12,000 பேர் அதிமுகவில் இணைந்தனர்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் காங்கிரஸ், தி.மு.க., பா.ம.க., ஐஜேகே ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 ஆயிரம் பேர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ், தி.மு.க. பா.ம.க., ஐஜேகே ஆகிய கட்சிகளில் பணியாற்றி வரும் விழுப்புரம், அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள்; ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் 3 பேர், பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் 4 பேர், ஊராட்சி மன்றத் தலைவர்கள் 29 பேர் உட்பட பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் 125 நிர்வாகிகள்; 800 மகளிர் உள்ளிட்ட 12,000 பேர் தங்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். சிவராஜ் தலைமையில் 400 பெண்கள் உள்ளிட்ட 5,000 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

இந்திய தேசிய, அரசு போக்குவரத்துத் தொழிலாளர் பேரவைத் தலைவராக பணியாற்றி வரும் பாளை அமரமூர்த்தி தலைமையில் 300 பெண்கள் உள்ளிட்ட 5,000 பேர் தத்தமது கட்சியில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

திருச்சி மாவட்ட முன்னாள் மாணவர் காங்கிரஸ் தலைவரான கே.வேங்கடாசலம் தலைமையில் 100 பெண்கள் உள்ளிட்ட 2,000 பேர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

அப்போது பேசிய ஜெயலலிதா, "உங்கள் வரவு நல்வரவு. எத்தகைய நம்பிக்கையுடன் கழகத்தில் இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை வீண்போகாது என்பதைத் தெரிவித்து, உங்கள் அனைவருக்கும் மிக ஒளிமயமான எதிர்காலம் அமையும்" என்றார்.