Published:Updated:

குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோருவோம்: பா.ஜனதா திடீர் அறிவிப்பு!

Vikatan Correspondent
குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோருவோம்: பா.ஜனதா திடீர் அறிவிப்பு!
குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோருவோம்: பா.ஜனதா திடீர் அறிவிப்பு!
குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோருவோம்: பா.ஜனதா திடீர் அறிவிப்பு!

புதுடெல்லி: குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரத்தின்போது ஏதாவது நாங்கள் தவறிழைத்திருந்தால் தலை குனிந்து மன்னிப்புக் கோருவோம் என பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நரேந்திர மோடிக்கு தொடர்ந்து பின்னடைவாக இருப்பது குஜராத் கலவரம்தான். கலவரத்தின்போது அதனை கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு.

இதன் காரணமாக இஸ்லாமிய சமூகத்தினர் அவரை அச்ச உணர்வுடன் பார்ப்பதாக கூறப்படும் நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட பிற கட்சிகளும் மோடியை மதவாதி என குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்லாமியர்களிடத்தில் பா.ஜனதா குறித்து ஏற்பட்டுள்ள

குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோருவோம்: பா.ஜனதா திடீர் அறிவிப்பு!

அபிப்பிராயத்தை மாற்றும் நோக்குடன், குஜராத் கலவரத்திற்கு மன்னிப்பு கோரப்படும் என தெரிவித்துள்ளார் பா.ஜனதா தலைவர் ராஜ்நாத் சிங்.

 'மோடியின் 272 + : முஸ்லிம்களின் பங்கு'  என்ற தலைப்பில் டெல்லியில் இன்று நடைபெற்ற மாநாட்டில் பேசிய ராஜ்நாத் சிங்,  " நாங்கள் எப்பொழுதாவது ஏதாவது தவறு செய்திருந்தால், அதற்காக நிச்சயம் நாங்கள் தலைகுனிந்து மன்னிப்புக் கேட்போம்" என்று குஜராத் கலவரத்தை பற்றி குறிப்பிட்டு பேசினார்.   

தொடர்ந்து பேசிய அவர், "இந்த நாடு பிளவுபடுவதை ஏற்றுக்கொள்பவர்கள்தான் உண்மையான மதவாதிகளே தவிர நாங்கள் அல்ல. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக நாங்கள் அரசியல் செய்யவில்லை. இந்த தேசத்தை கட்டமைக்கவே நாங்கள் அரசியல் செய்கிறோம்" என்றார்.