Published:Updated:

காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க 3வது அணி: பிரகாஷ் காரத்

Vikatan Correspondent
காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க 3வது அணி: பிரகாஷ் காரத்
காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க 3வது அணி: பிரகாஷ் காரத்

புதுடெல்லி: காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க.வை தோற்கடிப்பதற்காகத்தான் 3வது அணி உருவாக்கப்பட்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் தெரிவித்தார்.

காங்கிரஸ் மற்றும் பாஜகவை தோற்கடிக்க 3வது அணி: பிரகாஷ் காரத்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், பா.ஜ.க. அல்லாத 3வது அணி அமைப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று (25ஆம் தேதி) டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதாதளம் சார்பில் நிதீஷ்குமார், சமாஜ்வாடி சார்பில் முலாயம்சிங், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பிரகாஷ்காரத், ஜனதாதளம் எஸ் சார்பில் தேவகவுடா, அ.தி.மு.க. சார்பில் தம்பித்துரை உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இந்த கூட்டம் நடந்தது.

அதன்பின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் கூறும்போது, ''காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மக்களை ஏமாற்றிவிட்டது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாக நேரிடும். நாட்டில் விலைவாசி உயர்வுக்குக் காரணமான காங்கிரஸையும், அக்கட்சியைப் போன்ற கொள்கைகளை உடைய பா.ஜ.க.வையும் தோற்கடிப்பதற்காகத்தான் 11 கட்சிகள் அடங்கிய 3வது அணி உருவாக்கப்பட்டுள்ளது.

மதவாத அரசியலை முன்னெடுத்து வரும் பா.ஜ.க. நாட்டுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாகும். 3வது அணியின் பிரதமர் பதவி வேட்பாளர் குறித்து தேர்தலுக்குப் பின்னர் முடிவு செய்யப்படும். 3வது அணி முயற்சி வெற்றி பெற எங்களுடன் மதச்சார்பற்ற கட்சிகள் இணைய வேண்டும்'' என்றார்.