Published:Updated:

டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பொதுத்துறை நோட்டீஸ்!

Vikatan Correspondent
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பொதுத்துறை நோட்டீஸ்!
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பொதுத்துறை நோட்டீஸ்!
டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பொதுத்துறை நோட்டீஸ்!

புதுடெல்லி: அரசு பங்களாவில் தங்கியிருந்ததற்கான வாடகையை செலுத்துமாறு டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு பொதுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அரசு விதிகளின்படி அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த 15 நாட்களுக்கு மேல் அரசு பங்களாவில் வாடகையின்றி வசிக்க முடியாது. அவர்கள் விரும்பினால் 6 மாதங்கள் தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி வாடகையை செலுத்திவிட்டு வசிக்கலாம்.

இந்நிலையில், டெல்லி சட்டமன்ற தேர்தல் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது. இதில் போட்டியிட்ட எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சரான ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆனால், அவர் தங்கியிருந்த அரசு பங்களாவை காலி செய்யாமல் அங்கேயே வசித்த வந்த அவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் காலி செய்தார். இந்நிலையில், டெல்லியிலுள்ள அரசு பங்களாவில் தங்கியிருந்ததற்காக ரூ.3.25 லட்சத்தை வாடகையாக செலுத்துமாறு டெல்லி பொதுத்துறை, முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதேபோன்று முன்னாள் காங்கிரஸ் அமைச்சர்கள் கிரண் வாலியா ரூ.5.8 லட்சமும், அரவிந்தர் சிங் லவ்லி 6.5 லட்சமும் மற்றும் ஹருண் யூசுப் 2.9 லட்சத்தையும் வாடகையாக செலுத்துமாறு டெல்லி பொதுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.