Published:Updated:

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!
தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

சென்னை: தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (26ஆம் தேதி) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஏராளமான ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, 'இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்திடு!', 'ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை உடனே நடத்திடு!', 'ஈழத்தில் நடந்தது போர்க்குற்றம் அல்ல, இனப்படுகொலை', 'தமிழ் இனப்படுகொலை இன்றும் தொடர்கின்றது', 'ஈழம் ஒன்றே ஒரே தீர்வு!', 'இந்தியாவின் கைகளில் ஈழத்தமிழனின் ரத்தம்', 'சர்வதேசமே! உன் பாவத்தை இனப்படுகொலை விசாரணை, பொதுவாக்கெடுப்பு மூலம் கழுவிடு!', 'ஈழம் என்னும் நீதி கிடைக்கும் வரை ஓய மாட்டோம்!' போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ் ஈழம் மலர பொதுவாக்கெடுப்பு: வைகோ வேண்டுகோள்!

இதில் வைகோ பேசும்போது, ''ஈழத் தமிழ் இனத்தை பூண்டோடு கருவறுக்கத் திட்டமிட்டுக் கோரமான இனப்படுகொலை நடத்திய சிங்களப் பேரினவாத கொடியோன் ராஜபக்சே அரசையும், அவன் கூட்டத்தையும் சர்வதேச நீதிமன்றக் கூண்டில் ஏற்ற வேண்டும். அவர்களுக்கு தண்டனை தர வேண்டும். அதற்கு சுதந்திரமான பன்னாட்டு நீதி விசாரணையை அனைத்துலகம் நடத்த வேண்டும். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர தமிழ் ஈழத்திலும், தரணிவாழ் ஈழத் தமிழர்கள் மத்தியிலும் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். மனித குலத்தின் மனச்சாட்சியின் கதவுகளைத் தட்டுகிற நாள்தான் பிப்ரவரி 26 ஆகும்'' என்றார்.

அடுத்த கட்டுரைக்கு