Published:Updated:

ஜெயலலிதாவை சந்தித்த பா.ம.க. எம்.எல்.ஏ. கட்சியிலிருந்து நீக்கம்!

Vikatan Correspondent

சென்னை: அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ. கலையரசுவை பா.ம.க.வில் இருந்து நீக்கி அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து பா.ம.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.கலையரசு, தொகுதியில் உள்ள கட்சியினருக்கு விரோதமாகவும், கட்சி வளர்ச்சிக்கு
எதிராகவும் செயல்பட்டு வந்ததுடன், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் ஏற்படும் வகையில் செயல்பட்டு வந்ததால் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார்" என்று கூறப்பட்டுள்ளது.

கலையரசு எம்.எல்.ஏ, நேற்று தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து தனது தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக மனு  அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.