Published:Updated:

முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க பா.ஜ.க.விற்கு தைரியம் இல்லை: நிதிஷ் குமார்

Vikatan Correspondent

பாட்னா: முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்க பா.ஜ.க.விற்கு தைரியம் இல்லை என்று நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் ஏதாவது தவறு நேர்ந்திருந்தால் முஸ்லிம்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் கூறியிருந்தார். இதற்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ''மன்னிப்பு பெறுவதற்கு ஒருவருக்கு தைரியம் என்பது மிகவும் அவசியமாகும். ஆனால், அந்த தகுதி பா.ஜ.க.விற்கு முற்றிலும் கிடையாது. அவர்களின் இந்த கோரிக்கையை மக்கள் கண்டிப்பாக நிராகரிக்க வேண்டும்.

கருத்து கணிப்புகள் அனைத்தும் மக்களை ஏமாற்றுவதற்காக பணக்காரர்கள் விளையாடும் விளையாட்டு. கருத்துக் கணிப்புகள் அனைத்தும் மோடிக்கே சாதகமாக இருக்கும்போது அவர் ஏன் இன்னும் பிரதமர் நாற்காலியில் உட்காராமல் காத்துக் கொண்டு இருக்கிறார்?" என்று கூறினார்.