Published:Updated:

பா.ஜ.க. முதல் வேட்பாளர் பட்டியல்: 8 மாநிலங்களில் 54 வேட்பாளர்கள் அறிவிப்பு!

Vikatan Correspondent

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் 8 மாநிலங்களில் 54 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர் முதல் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதை அக்கட்சியின் பொதுச் செயலாளர் தவர்சந்த் கெலோத் வெளியிட்டார்.

இதில் அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், கோவா, மேற்குவங்கம், ஒடிஷா, மகாராஷ்டிரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் ஆகிய 8 மாநிலங்களில் இருந்து 54 தொகுதிகளுக்கு மட்டும் முதல்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த முதல் வேட்பாளர் பட்டியலில், அக்கட்சியின் முன்னாள் தலைவர் நிதின் கட்கரி, பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் உட்பட 54 பேர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இமாச்சலப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சாந்த குமார், மூத்த தலைவர் கோபிநாத் முண்டே ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நிதின் கட்கரி மகாராஷ்டிராவில் உள்ள நாக்பூர் தொகுதியில் போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.