Published:Updated:

பெற்றோரை இழந்த 4 பெண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் வைப்பு நிதி: ஜெயலலிதா வழங்கினார்

Vikatan Correspondent
பெற்றோரை இழந்த 4 பெண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் வைப்பு நிதி: ஜெயலலிதா வழங்கினார்
பெற்றோரை இழந்த 4 பெண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் வைப்பு நிதி: ஜெயலலிதா வழங்கினார்

சென்னை: பெற்றோரை இழந்து வாடும் காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த 4 பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்களையும் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.

பெற்றோரை இழந்த 4 பெண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் வைப்பு நிதி: ஜெயலலிதா வழங்கினார்

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதலமைச்சரின் தனிப்பிரிவில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தைச் சேர்ந்த பூபாலன் மற்றும் அவரது மனைவி அம்முலு ஆகியோர் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகளில் உயிரிழந்ததையடுத்து, அவர்களை இழந்து வாடும் அவர்களின் 4 பெண் குழந்தைகளான, நந்தினி (14), அனுஷா (13), திரிஷா (11), நமீதா (5) ஆகியோருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 4 லட்சம் ரூபாய்க்கான நிரந்தர வைப்பு நிதி பத்திரங்கள்;

மாற்றுத் திறனாளி வில்வித்தை வீராங்கனை எஸ்.கலைச்செல்வி கடந்த 2012-ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடைபெற்ற இந்திய தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று தங்கப்பதக்கங்களை பெற்றமைக்காகவும், அவர் உலகளவில் வில்வித்தைப் போட்டிகளில் பங்கு பெறுவதற்கான சிறப்பு பயிற்சிகளை மேற்கொள்ளும் பொருட்டும், வில், அம்பு மற்றும் இதர உபகரணங்கள் வாங்குவதற்காகவும் கலைச்செல்விக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நிதியிலிருந்து 1 லட்சத்து 14 ஆயிரத்து 532 ரூபாய்க்கான காசோலை;

பெற்றோரை இழந்த 4 பெண் குழந்தைகளுக்கு ரூ.4 லட்சம் வைப்பு நிதி: ஜெயலலிதா வழங்கினார்

காஞ்சிபுரம், அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு படித்து வரும் ஏழை மாற்றுத் திறனாளி மாணவன் நா.பரணிக்கு சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நான்கு வருட பொறியியல் படிப்பிற்கான கல்வி உதவித் தொகையில், முதல் வருட படிப்பிற்கான கல்வி உதவித் தொகை 21 ஆயிரத்து 430 ரூபாய்க்கான காசோலை; என 5 லட்சத்து 35 ஆயிரத்து 962 ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் மற்றும் காசோலைகளை முதலமைச்சர் ஜெயலலிதா பயனாளிகளுக்கு வழங்கினார்" என்று கூறப்பட்டுள்ளது.