Published:Updated:

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மார்ச் 7 ல் இறுதி விசாரணை!

Vikatan Correspondent
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மார்ச் 7 ல் இறுதி விசாரணை!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மார்ச் 7 ல் இறுதி விசாரணை!
ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு: மார்ச் 7 ல் இறுதி விசாரணை!

பெங்களூரு: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வெள்ளிப் பொருட்களை ஒப்படைக்க கோரிய அரசு வழக்கறிஞர் மனுவை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி  செய்ததோடு, வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 7 ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்துள்ளது.

முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் சட்ட ஆலோசகர் பாஸ்கரன் எடுத்துச் சென்ற 1116 கிலோ வெள்ளிப் பொருட்களை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் பொருட்களை ஒப்படைத்த பின் மதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிமன்றம், மார்ச் 7ஆம் தேதி முதல் வழக்கில் இறுதி வாதத்தை தொடங்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டார்.