Published:Updated:

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10% அகவிலைப்படி உயர்வு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Vikatan Correspondent

புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதுள்ள 90 சதவீத அகவிலைப்படியை, மேலும் 10 சதவீதம் உயர்த்தி 100 சதவீதமாக உயர்த்தி வழங்க டெல்லியில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் முன் தேதியிட்டு இந்த உயர்வு அமல்படுத்தப்படும்.

இதன்மூலம் 50 லட்சம் தொழிலாளர்களும், 30 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயனடைவர்.

இதுதவிர வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் குறைந்த பட்ச ஓய்வூதியமாக ரூ. 1000 வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.