Published:Updated:

போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமர் சந்திக்க ராமதாஸ் எதிர்ப்பு!

Vikatan Correspondent
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமர் சந்திக்க ராமதாஸ் எதிர்ப்பு!
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமர் சந்திக்க ராமதாஸ் எதிர்ப்பு!
போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமர் சந்திக்க ராமதாஸ் எதிர்ப்பு!

சென்னை: "மியான்மரில் போர்க்குற்றவாளி ராஜபக்சேவை பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "மியான்மரில் நடைபெறவிருக்கும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்கக்கடல் முன்முயற்சி (பிம்ஸ்டெக்-BIMSTEC) அமைப்பின் மூன்றாவது மாநாட்டில் பங்கேற்க அந்நாட்டிற்கு அடுத்தவாரம்   செல்லும் பிரதமர் மன்மோகன் சிங், அங்கு இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவை வரும் 4 ஆம் தேதி சந்திக்க இருப்பதாக வெளியுறவுத்துறை அறிவித்திருக்கிறது.

இலங்கை மீது போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை  விசாரணை நடத்த வலியுறுத்தும்  தீர்மானத்தை இந்தியாவே கொண்டு வர வேண்டும்  என்ற கோரிக்கை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களிடையே எழுந்திருக்கிற சூழலில், போர்க்குற்றவாளியாக கருதப்பட வேண்டிய இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசவிருப்பது  பெரும் அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது.

இந்த நேரத்தில் ராஜபக்சேவை மன்மோகன்சிங் சந்தித்தால், அது பெரும்பான்மையான ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு, ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்திவிடும் வாய்ப்புள்ளது.

எனவே, ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த ராஜபக்சேவை  மியான்மர் மாநாட்டின் போது பிரதமர் மன்மோகன் சிங் சந்திக்கக் கூடாது. மாறாக, இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற மற்றும் இனப்படுகொலை விசாரணை நடத்த வலியுறுத்தும் தீர்மானத்தை ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கொண்டு வர இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.