Published:Updated:

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி
7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரை விடுதலை செய்ய முதல்வர் ஜெயலலிதா எடுத்துள்ள நடவடிக்கை தேசிய அளவில் காரசார விவாதத்தை உருவாக்கி உள்ளது.

ஜெயலலிதா உருவபொம்மையை கொளுத்தி வடஇந்தியாவில் காங்கிரஸ் போராட்டங்கள் நடத்தி வருகிறது. தமிழக காங்கிரஸ் சார்பிலும் போராட்டங்கள் நடக்கிறது. இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செய்தி தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸை சந்தித்தோம்.

''சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ், முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பு மிகவும் துரதிஷ்டவசமானது. இந்த நாட்டில் தேர்தல்கள் வரலாம்; போகலாம். அரசியல் கட்சிகள் ஆட்சிக் கட்டிலில் அமரலாம்; ஆட்சியை இழக்கலாம். ஆனால், தேசிய நலன், நாட்டின் பாதுகாப்பு போன்ற அடிப்படை பிரச்னைகளில் அரசியல் கண்ணோட்டத்துடன் நடப்பதும் அரசியல் ஆதாயம் எதிர்பார்ப்பதும் மிகப்பெரிய தவறு.

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, பாரத தேசத்தின் புகழ்வாய்ந்த குடும்பத்தின் வழியில் தோன்றியவர். நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களை தனது வசீகர புன்னகையால், கள்ளம் கபடமற்ற அன்பால் ஈர்த்து வைத்திருந்த அற்புதத்தலைவரை பயங்கரவாதிகள் திட்டமிட்டு தமிழ் மண்ணில் வெடிகுண்டு வைத்து படுகொலை செய்ததை ஒரு சாதாரண கொலையாக யாரும் பார்க்க முடியாது. இந்த கொலைக்கு பின்னால், சர்வதேச பயங்கரவாத சதிகள்; அவர்களுக்கு இந்தியாவில் இருக்கின்ற தீவிரவாதிகளுடனான உறவுகள், எதிர்கால இந்தியாவின் பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்கள், உள்நாட்டு வன்முறை கலாச்சார அச்சுறுத்துத்தல்களின் அபாயம் என்று பல கோணங்களில் பிரச்னை ஆராயப்பட வேண்டும்.

விடுதலை செய்ய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள 7 பேரில் முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் நம் நாட்டை சேர்ந்தவர்கள் அல்ல. இவர்கள், விடுதலைக்கு பிறகு எங்கே இருப்பார்கள்? இவர்களுடைய நடவடிக்கைகள் எப்படி இருக்கும்? இவர்களை இந்தியாவில் தங்க அனுமதிக்கலாமா? தங்க அனுமதித்தால், அதனால் இந்தியாவின் பாதுகாப்புக்கும் உள்நாட்டு அமைதிக்கும் ஆபத்து இருக்காதா? என்பது போன்ற கேள்விகள் மிக மிக முக்கியமானவை. இந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதற்கான உரிமையும் தகுதியும் தமிழக அரசு உள்பட எந்த மாநில அரசுகளுக்கும் கிடையாது. அவர்களைப் பற்றி முடிவெடுக்கும் அதிகாரம் இந்திய அரசியல் சாசன சட்டப்படி மத்திய அரசுக்கு மட்டுமே உள்ளது" என்று பொரிந்து தள்ளியவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

ஜெயலலிதா அவசரப்பட்டு விட்டார் என்கிறீர்களா?

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

''ஜெயலலிதாவின் அறிவிப்பை அடுத்து, இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் பதைபதைத்து பிரதமரை சந்தித்துள்ளார். தமிழக அரசின் முடிவினால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி எச்சரித்துள்ளார். மரண தண்டனை வேண்டாம் என்று சொல்வது வேறு. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை போன்ற சர்வதேச பயங்கரவாதத்தின் வெளிப்பாடாக நடந்து முடிந்த அரசியல் கொலை சம்பந்தபட்டவர்களை எவ்விதமான ஆலோசனையும் திட்டமிடுதலும் இல்லாமல் 72 மணி நேரத்திற்குள் எனக்கு தகவல் சொல்லவில்லை என்றால் அவர்களை விடுதலை செய்வேன் என்று அறிவித்திருப்பது எப்படி ஒரு பொறுப்புள்ள நிர்வாகத்தின் முடிவாக இருக்க முடியும். இவ்வாறு ஒரு முடிவு தமிழகத்தில் எடுக்கப்பட்டால் இந்தியா முழுவதும் பல பயங்கரவாத நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பல்வேறு தீவிரவாத இயக்கத்தினர்களை அந்தந்த மாநில அரசுகள் தங்கள் தேர்தல் ஆதாயத்துக்காக விடுதலை செய்வோம் என்று சொன்னால் இந்தியாவின் சமூக அமைதிக்கும் பாதுகாப்புக்கும் யார் உத்தரவாதம் கொடுப்பது?

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

சமீபத்தில், நளினியின் பரோல் மனு தமிழக அரசின் பரிசீலனைக்கு வந்தபோது, ‘வெளியே விட்டால் சட்டம் ஒழுங்கு பிரச்னை வரும்’ என்று பரோல் மனுவை நிராகரித்தது தமிழக அரசு. ஆனால், இப்போது எந்த சூழ்நிலை மாற்றத்தால் இந்த 7 பேரை உடனடியாக விடுதலை செய்யும் முடிவுக்கு தமிழக அரசு வந்தது என்பதை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்த முதலமைச்சர் கடமைப்பட்டுள்ளார். சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக் கொன்றபோது அவன் தமிழன் என்ற எண்ணம் தமிழக அரசுக்கு வரவில்லையா? வீரப்பனின் மனைவி, பிள்ளைகள் கண்ணீர் விடுவார்கள் என்று அரசுக்கு தெரியாதா? கோவை குண்டு வெடிப்பில் தண்டனை பெற்று 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்களே? அவர்களை விடுதலை செய்யப்போகிறீர்களா? அவர்களும் தமிழர்கள்தானே?" என்றார்.

தமிழக அரசியல் கட்சிகள் முதல்வர் அறிவிப்பை வரவேற்றுள்ளார்களே?

''ராஜீவ்காந்தி படுகொலை ஒரு தனிப்பட்ட குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பு; காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட இழப்பு என்று தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்தால் எதிர்கால தமிழகம் இதற்கு மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டியது இருக்கும். இதைப் போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கும்போது அரசியல் ரீதியாக பரபரப்பான அறிவிப்புகளை செய்து அரசியல் ஆதாயம் தேட முற்படாமல் மாநில அரசின் உள்துறை செயலாளர் மூலம் மத்திய அரசின் உள்த்துறை செயலாளரை தொடர்பு கொண்டு, ‘தமிழக அரசின் அல்லது முதல்வர் இப்படி விரும்புகிறார்; மத்திய அரசு கருத்து என்ன?’ என்பதை தீர விசாரித்து அதற்கு பின்பு ஒரு முடிவு எடுத்து அந்த முடிவை வெளியிட்டால் அது ஆரோக்கியமான முடிவாக இருக்கும். ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எழுதப்பட்ட மை காயும் முன்பே எடுத்தேன்; கவிழ்த்தேன் என்ற தோணியில் மத்திய அரசுக்கு 72 மணி நேர கெடு அறிவிப்பது நல்ல முன்னுதாரணம் அல்ல.

7 பேர் விடுதலையை தடுக்க ஆளுநர் தலையிட வேண்டும்: பீட்டர் அல்போன்ஸ் சிறப்பு பேட்டி

நான் 7 தமிழர்களை விடுதலை செய்கிறேன் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். 3 தமிழர்கள் தூக்கு கயிற்றில் இருந்து காப்பாற்றி இருக்கிறோம் என்று சில அரசியல் கட்சி தலைவர்கள் மார்தட்டிக் கொள்கிறார்கள். ராஜீவ் படுகொலை செய்யப்பட்ட போது சுதந்திர போராட்ட வீரரும் சட்டமேலவை முன்னாள் உறுப்பினரும் தலீத் சமூக தலைவருமான லீக் முனுசாமி காவல் துறை அதிகாரிகள் பி.கே.குப்தா, டி.கே.எஸ்.முகமது இக்பால், ராஜகுரு, எட்வர்ட் ஜோசப், எத்திராஜூலு, முருகன், ரவிச்சந்திரன், தர்மன், திருமதி சந்திரா மற்றும் காங்கிரஸ் பிரமுகர்கள் லதாகண்ணன், குழந்தை கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேரியல் பீட்டர் ஆகிய 15 பேரும் துடிக்கத்துடிக்க பச்சை ரத்தம் கொப்புளிக்க பலியானார்கள்.

இறந்து போன பல காவல்துறை அதிகாரிகள் 30 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மனைவியர்களையும் 10, 12 வயது பிள்ளைகளையும் அனாதைகளாக்கிவிட்டு மரித்துப் போனார்கள். அவர்கள் கண்ணீரை யார் துடைப்பது? அவர்களுக்கு நீதி தருவது யார்? இந்த சூழ்நிலையில், தமிழக ஆளுநருக்கு மிகப்பெரிய பொறுப்பு இருப்பதாக நினைக்கிறேன். அவர், 7 பேர் விடுதலை பிரச்னையில் தலையிட்டு தன்னுடைய அரசியல் சாசன சட்டக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

இறுதியாக, ராகுல் காந்தி சொன்ன வாசகங்களை தமிழகத்தின் குடிமக்கள் ஒவ்வொருவரும் நினைவில்கொள்ள வேண்டும். ‘தூக்குத் தண்டனையை நிறைவேற்றினாலும் கொலை செய்யப்பட்ட எனது தந்தை திரும்ப வரப்போவதில்லை; ஆனால், தேசத்தின் பிரதமரை கொலை செய்பவர்களையே இப்படி விடுதலை செய்தால் சாமானிய மனிதனுக்கு எப்படி நீதி கிடைக்கும். சாமானியர்களுக்கு யார் பாதுகாப்பு?’ இந்த கேள்விக்கான பதிலை தமிழக மக்கள்தான் தர வேண்டும்" என்று முடித்தார்.

-எஸ்.முத்துகிருஷ்ணன்

அடுத்த கட்டுரைக்கு