Published:Updated:

ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ கட்சி பதவி பறிப்பு!

Vikatan Correspondent
ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ கட்சி பதவி பறிப்பு!
ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ கட்சி பதவி பறிப்பு!
ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ கட்சி பதவி பறிப்பு!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்த தே.மு.தி.க எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியத்தின் கட்சி பதவியை பறித்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

திருத்தணி தொகுதி தே.மு.தி.க சட்டமன்ற உறுப்பினர் அருண் சுப்பிரமணியம், தொகுதி சார்ந்த பணிகள் தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்தார்.

இந்நிலையில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட தே.மு.தி.க செயலர் பதவியில் இருந்து எம்.எல்.ஏ அருண் சுப்பிரமணியத்தை நீக்கி, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.