Published:Updated:

பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வெடுக்க தயாராகிறது அரசு பங்களா!

Vikatan Correspondent
பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வெடுக்க தயாராகிறது அரசு பங்களா!
பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வெடுக்க தயாராகிறது அரசு பங்களா!
பிரதமர் மன்மோகன் சிங் ஓய்வெடுக்க தயாராகிறது அரசு பங்களா!

புதுடெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் தனது பதவி காலம் முடிந்த பின் ஓய்வெடுப்பதற்காக, ஷீலா தீட்சித் தங்கியிருந்த அரசு பங்களா தயாராகி வருகிறது.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றாலும், பிரதமர் பதவி வகிக்க மாட்டேன் என பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதையடுத்து, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அவர் ஓய்வெடுக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், அவரது பதவிக் காலம் முடிந்ததும் ஓய்வெடுப்பதற்காக, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் தங்கியிருந்த அரசு பங்களா தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

டெல்லி, மோதிலால் நேரு மார்க் பகுதியின் எட்டாவது பிளாக்கில் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது அந்த பங்காளா. தற்போது நன்கு பராமரிக்கப்பட்டு வரும் இந்த பங்களாவில் புல்வெளிகள் மற்றும் பூங்காக்கள் இருக்கிறது. பிரதமர் மன்மோகன்சிங், இந்த பங்களாவில் ஓய்வெடுக்க இருப்பதையடுத்து, அதை புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.