Published:Updated:

மாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

Vikatan Correspondent
மாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!
மாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!
மாநில சட்ட ஆணையத்துக்கு 5 உறுப்பினர்கள் நியமனம்!

சென்னை: திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக ஐந்து பேரை நியமித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநில சட்ட ஆணையத்தை திருத்தியமைத்து, மாநில சட்ட ஆணையத்தின் தலைவராக ஜார்கண்ட் மாநில உயர்நீதி மன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி, நீதியரசர் என்.தினகர் கடந்த 27.01.2014 அன்று நியமித்து முதல்வர் ஜெயலலிதா ஆணையிட்டிருந்தார்.

இந்த மாநில சட்ட ஆணையத்தின் பிற உறுப்பினர்கள் பின்னர் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார். தற்போது, திருத்தியமைக்கப்பட்ட மாநில சட்ட ஆணையத்தின் உறுப்பினர்களாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி டி.சுதந்திரம், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) ஆர். விவேகானந்தன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.தயாளன், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி ஆர்.முனிரத்தினம், சட்டத்துறை கூடுதல் செயலாளர்(ஓய்வு) ஆர்.கதிர்வேல் ஆகியோரை நியமித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.