Published:Updated:

சோனியா, ராகுல் ஏமாற்று காந்திகள்: மோடி கடும் சாடல்!

Vikatan Correspondent
சோனியா, ராகுல் ஏமாற்று காந்திகள்: மோடி கடும் சாடல்!
சோனியா, ராகுல் ஏமாற்று காந்திகள்: மோடி கடும் சாடல்!
சோனியா, ராகுல் ஏமாற்று காந்திகள்: மோடி கடும் சாடல்!

பெங்களூர்: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், ராகுலும் ஏமாற்று காந்திகள் என பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கடுமையாக சாடி உள்ளார்.

கர்நாடக மாநிலம், குல்பர்காவில் பா.ஜ.க.வின் தேர்தல் பிரசாரக் கூட்டம் இன்று நடந்தது. இதில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார்.

அவர் பேசும்போது, ''சில தினங்களுக்கு முன்பு சோனியா இங்கு வந்தார். அவர் ஜனநாயகம் என்றால் அரசு செலவு செய்த ஒரு பைசாவிற்கும் கணக்கு தெரிவிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார். ஆனால், அவர் கடந்த 10 ஆண்டுகளில் என்ன வேலை செய்தார் என்பதை கூறினாரா? விலைவாசி உயர்வு, ஊழல்கள் அதிகரித்திருப்பதற்கு சோனியா பதில் கூறுவாரா? 2004ஆம் ஆண்டு நடந்த தேர்தலின்போது ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் விலைவாசியை குறைப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அதனை செய்ததா? காங்கிரசின் வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

சோனியாவும், ராகுலும் ஏமாற்று காந்திகள். ஆந்திர பிரதேசத்தில் அந்த ஏமாற்று காந்திகள் என்ன செய்திருக்கிறார்கள் என்று பாருங்கள். தெலுங்கானா மற்றும் சீமாந்திரா என இரண்டு மாநிலங்களும் நன்றாக இருக்க வேண்டும் என்பதையே  நாம் விரும்புகிறோம். ஆனால், காங்கிரஸ் என்ற டாக்டர்,  தாயை கொலை செய்து விட்டு குழந்தை மட்டும் போது என்று சொல்கிறது.

காங்கிரஸ் கட்சி நாட்டை பிரித்து அதன் மூலம் வாங்கு வங்கியை உயர்த்திக் கொள்ள விரும்புகிறது. ஆனால் தெலுங்கானா நூற்றுக்கணக்கான மக்களின் தியாகத்தால் உருவாக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியால் அல்ல. சீமாந்திராவில் ஒன்றும் பெற முடியாது என்று காங்கிரஸ் கட்சிக்கு தெரிந்து விட்டது. அதனால் தாங்களை காத்துக்கொள்ள சீமாந்திராவை விட்டு செல்கின்றனர். இது மிகவும் தவறானது.

இந்த நாட்டை காங்கிரஸ் கட்சி சிதைத்து விட்டது. அதனால் அக்கட்சியை கசாப்புக் கடை என கூறுகிறேன். காங்கிரஸ் கட்சியினால் ஏற்படும் பிரச்னையை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். எனவே, வரும் நாடாளுமன்ற தேர்தலோடு செய்த பாவத்திற்காக காங்கிரஸ் கட்சி தூக்கி எறியப்பட உள்ளது'' என்றார்.