Published:Updated:

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பா.ஜ.க. ரயில் மறியல்!

Vikatan Correspondent
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பா.ஜ.க. ரயில் மறியல்!
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பா.ஜ.க. ரயில் மறியல்!
பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி பா.ஜ.க. ரயில் மறியல்!

பாட்னா: பீகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி அம்மாநில பா.ஜ.க.வினர் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆந்திரா மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனி தெலங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு மசோதா நிறைவேற்றியது. இதையடுத்து சீமாந்திரா பகுதிக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், பல நாட்களாக கோரிக்கை வைத்தும், பீகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்காத மத்திய அரசை கண்டித்து பீகார் மாநிலத்தில் பா.ஜ.க. சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ரயில் நிலையத்தில், உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களுக்குச் செல்லும் ரயில்களை மறித்து, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.

சீமாந்திர பகுதிக்கு மட்டும் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்படும் என அறிவிப்பதும், பீகாரை புறக்கணிப்பதும் மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என பா.ஜ.க.வினர் குற்றம்சாட்டினர். பா.ஜ.க.வினரின் இந்த மறியல் காரணமாக, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

இதேகோரிக்கையை வலியுறுத்தி, நாளை மறுநாள் (2ஆம் தேதி) ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சி முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.