Published:Updated:

மீண்டும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட அத்வானி விருப்பம்!

Vikatan Correspondent
மீண்டும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட அத்வானி விருப்பம்!
மீண்டும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட அத்வானி விருப்பம்!
மீண்டும் காந்தி நகர் தொகுதியில் போட்டியிட அத்வானி விருப்பம்!

ஆமதாபாத்: ஏற்கனவே 5 முறை வெற்றி பெற்ற காந்தி நகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புவதாக பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.

பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, குஜராத் மாநிலம், காந்திநகர் தொகுதியில் 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த தேர்தலில் பா.ஜ.க. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்த அவர், இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட, 1.21 லட்சம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

இந்நிலையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில், பிரதமர் வேட்பாளராக குஜராத் முதலமைச்சர் நரேந்திரமோடி களம் இறங்கியுள்ள நிலையில், அத்வானியை டெல்லி மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்ய கட்சி மேலிடம் விரும்பியது. ஆனால், நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதில் அத்வானி உறுதியாக இருந்தார். இந்நிலையில், நேற்று வெளியிடப்பட்ட பா.ஜ.க.வின் முதல் வேட்பாளர் பட்டியலில் அத்வானி பெயர் இடம் பெறவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக இன்று காந்தி நகர் வந்திருந்த அத்வானி, நிருபர்களிடம் கூறும்போது, ''இதுவரை நான் 5 முறை வெற்றி பெற்ற காந்திநகர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விரும்புகிறேன். இது குறித்து கட்சி இறுதி முடிவு எடுக்கும்'' என்றார்.