ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

தா.பா. செய்வதெல்லாம் தவறு!

இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு குட் பை சொன்ன தர்மபுரி தோழர்கள்!

##~##

தா.பாண்டியனின் செயல்பாடுகள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கே சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டது. 

இது, தர்மபுரி மாவட்டத்தில் முதலாவதாக வெடிக்க ஆரம்பித்து உள்ளது. அந்தக் கட்சியில் இருந்து கிட்டத்தட்ட 6,000 பேர் விலகி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து இருக்கிறார்கள்.

கடந்த 15-ம் தேதி, மார்க்சிஸ்ட் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் இந்த இணைப்பு விழா நடந்தது. தா.பாண்டியன் ஆதரவாளர்கள் கணிசமாக இருக்கும் பென்னாகரத்தில் இந்தவிழா நடந்தது. கட்சியின் மாநிலச்செயலாளர் தா.பாண்டியன் மற்றும் சி.மகேந்திரன் உள்ளிட்டோரின் செயல்பாடுகளைக் கண்டித்தே இந்தக் கட்சித்தாவல் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளராக இருந்து இப்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருக்கும் இளம்பரிதியிடம் பேசினோம். ''1970-களில் முன்னோடித் தோழர்கள் பலரின் கடும்உழைப்பால் தர்மபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலமாக கால் ஊன்றியது. இதற்காக அவர்கள் கொடுத்த விலையும் உழைப்பும் ஈடுசெய்ய முடியாதது. அவர்களின் தியாகங்களில் வளர்ந்த இந்தப் போராட்ட இயக்கம், இடையில் சிலரின் சுயலாபத்துக்காக செயல்படும் நிர்பந்தத்துக்கு ஆளானது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் முரண்பட்டு யு.சி.பி.ஐ. என்ற புதிய கட்சியைத் தொடங்கி, மீண்டும் தி

தா.பா. செய்வதெல்லாம் தவறு!

ரும்பியவர் தா.பாண்டியன். நல்லகண்ணு போன்றவர்களின் முடிவுக்கு இணங்க 2000-ல் திருவாரூர் மாநாட்டில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆக்கப்பட்டார் தா.பாண்டியன்.

அவரைத் தேர்ந்தெடுத்த நேரத்தில் நான், தேவ.பேரின்பன் உள்ளிட்ட சிலர் கடும் எதிர்ப்புக் காட்டினோம். அதை மனதில்கொண்டு எங்களைப் புறக்கணிக்கும் வேலைகளைச் செய்தது புதிய மாநிலத் தலைமை. அதுமட்டும் அல்லாமல், தா.பாண்டியன் தனிக்கட்சி தொடங்கிய காலத்தில் அவருடன் நின்ற தர்மபுரி மாவட்ட ஆட்களை பொறுப்பில் நியமிப்பது, அவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவது என்று கட்சியின் போக்கே நாளுக்குநாள் மாறியது. எதையும்

தா.பா. செய்வதெல்லாம் தவறு!

எதிர்பாராமல் உழைத்த தேவ.பேரின்பன் போன்றவர்கள் மொத்தமாக ஓரங்கட்டப்பட்டு பொறுப்புகள் பறிக்கப்பட்டன.

கடந்த ஆண்டு, ராஜபாளையத்தில் நடந்த மாநில மாநாட்டுக்கு முன்பாக, மாவட்டங்கள் தோறும் ஒன்றிய அளவில் மாநாடுகள் நடத்தப்பட்டன. அப்போது, மாவட்டச் செயலாளராக இருந்த என் தலைமையில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் மாநாடுகள் நடத்தப்பட்டன. அதற்குப் போட்டி மாநாடு தா.பாண்டியன் ஆதரவாளர்களால் அனைத்து ஒன்றியங்களிலும் நடத்தப்பட்டன. இந்தச் சூழலில், கட்சிக்காக உழைத்த நான், ஆறுமுகம், சிசுபாலன், வெங்கட்ராமன், சோ. அர்ச்சுனன், மோகன் உள்ளிட்ட பலரும் படிப்படியாக டம்மி ஆக்கப்பட்டோம். அதைத்தொடர்ந்து, மாவட்டக் குழுவைக் கலைத்தனர். பாண்டியனின் ஆதரவாளர்கள் காட்டிய போலி உறுப் பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், அவரது துதிபாடிகள் கையில் அனைத்துப் பொறுப்புகளும் வழங்கப்பட்டன.

பல முக்கியக் கொள்கைகள் சுயநலத்துக்காக அடமானம் வைக்கப்பட்டபோது, அதை எங்களால் பொறுக்க முடியவில்லை. கொள்கை முரண்பாடுகளோடு இரட்டை வாழ்க்கை வாழும் ஆட்களை கட்சிக்குள் சேர்ப்பதைத் தொடர்ந்து கண்டித்தோம். இப்படி நியாயத்தை வலியுறுத்திய அனைவரும் வஞ்சிக்கப்பட்டோம். இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற நிலையில்தான், கம்யூனிஸத்தை சுவாசமாகக் கொண்ட எங்களைப் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகுவது என்று முடிவெடுத்தோம். மேலும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கான தர்மபுரி மாவட்ட அலுவலக இடம், மறைந்த தோழர் முத்துவுக்குச் சொந்தமானது. அது, போலி கம்யூனிஸ்ட்கள் கைகளில் சிக்கிவிடக் கூடாது என்பதால், அலுவலகத்தை அந்தத் தோழர் பெயரில் அறக்கட்டளையாக மாற்றி நாங்கள் கைப்பற்றி உள்ளோம். இனி, மார்க்சிஸ்ட் கட்சியில் எங்கள் மக்கள் பணி தொடரும்'' என்று கொட்டித் தீர்த்தார்.

தா.பா. செய்வதெல்லாம் தவறு!

''மாவட்டம் முழுவதும் 241 கிளைகளைச் சேர்ந்த 6,000 உறுப்பினர்கள் மட்டும் இன்றி விவசாய அமைப்பு, தொழிலாளர் அமைப்பு, மகளிர் அமைப்பு, இளைஞர் அமைப்பு என பல்வேறு மட்டங்களில் தர்மபுரி மாவட்ட சி.பி.ஐ-க்கு பலமான இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்கிறார்கள் விவரமறிந்த வட்டாரத்தினர்.

கட்சிக் கூடாரம் மொத்தமாக காலியாகி இருப்பதைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச்செயலாளர் தா.பாண்டியனிடம் கேட்டபோது, ''கட்சியில் செல் வாக்கு கொண்டவர்களைப் பொறுப்பாளர்களாக நியமனம் செய்துள்ளோம். இதனால், அதிருப்தியில் இருந்தவர்களிடம் டி.ராஜா, நல்லகண்ணு ஆகியோர் பேசியும் பயனில்லை. மேலும், கட்சி அலு வலகத்தை அத்துமீறி கைப்பற்றி அறக்கட்டளை ஆக்கி இருக்கிறார்கள். அதைச் சட்டப்படி சந்தித்து அலுவலகத்தை மீட்போம். அவர்கள் அறிவித்த எண் ணிக்கையிலான உறுப்பினர்கள் உண்மையாகவே அங்கே சென்று இருக்கிறார்களா என்று நீங்களே எண்ணிப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதனால், எங்கள் கட்சிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை'' என்று பதில் தந்தார்.

பதில் பிரமாதமாய் இருக்கிறதே!

- எஸ்.ராஜாசெல்லம்