ஏரியா ரவுண்ட்ஸ்
Published:Updated:

கழுகார் பதில்கள்!

கழுகார் பதில்கள்!

முகேஷ், சென்னை.

கழுகார் பதில்கள்!

ராபர்ட் வதேரா மீதும் புகார்கள் வந்துவிட்டதே?

கழுகார் பதில்கள்!

குடும்ப 'கௌரவத்தை’க் காப்பாற்ற வேண்டாமா? புகார்களும் ஊழல் குற்றச்சாட்டுகளும் இருப்பது தானே பெருமை? காங்கிரஸ் அரசாங்கத்தின் முறைகேடுகளை நேருவின் மருமகன் ஃபெரோஸ், நாடாளுமன்றத்தில் அம்பலப்படுத்தினார். இப்போது, ராஜீவ், சோனியாவின் மருமகனே அம்பலப்பட்டு நிற்கிறார். இதைத்தான் பரிணாம வளர்ச்சி என்பார்கள்.

 அ.வசந்தகுமார், திருப்பூர்.

கழுகார் பதில்கள்!

வைகோ - நாஞ்சில் சம்பத்?

அவரை வைத்துக்கொள்ள இவருக்கு விருப்பம் இல்லை. இவரோடு இருக்க அவரும் விரும்பவில்லை என்றே தெரிகிறது.

 எஸ்.முருகன், திருவள்ளூர்.

கழுகார் பதில்கள்!

ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று பிரதமர் மன்மோகன் கூறியுள்ளாரே?

##~##

மத்தியப் புலனாய்வுத் துறை மற்றும் மாநில ஊழல் தடுப்புப் பிரிவுகளின் 19-வது மாநாட்டைத் தொடங்கி வைத்துத்தான் இப்படிச் சொல்லி இருக்கிறார் பிரதமர். சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதைவிட, சட்டத்தை அமல்படுத்து வதில்தான் அதிகக் குறைபாடுகள் இருக்கின்றன. சி.பி.ஐ-யில் இருக்கும் ஆள்பற்றாக்குறையும் மிகமுக்கியமான காரணம். சி.பி.ஐ-க்கு வரும் பல்வேறு ஊழல் வழக் குகளை விசாரிக்க, அங்கு போதுமான அதிகாரிகள் இல்லை என்பதை அதன் இயக்குனர் அமர் பிரதாப் சிங்கே சொல்கிறார். எனவே, முதலில் ஆட்கள் பற்றாக்குறையை சரிசெய்வது முக்கியமானது! 

மு.இரா.கலை அரசன், தஞ்சாவூர்.

கழுகார் பதில்கள்!

கறுப்புச் சட்டை அணிந்து தி.மு.க. துண்டுப் பிரசுரம் கொடுத்தது. பச்சை சேலை அணிந்து அ.தி.மு.க. துண்டுப் பிரசுரம் வழங்கியது. இரண்டும் உமக்குக் கிடைத்ததா?

கவுண்டமணி ஸ்டைலில் சொல்வதாக இருந்தால்... 'கலர் கலரா ஃபிலிம் காட்டுறாங்கப்பா!’

 எஸ்.சஞ்சய், விருதுநகர்.

கழுகார் பதில்கள்!

அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் புதிய பேரவைத் தலைவராகப் பொறுப்பேற்கும் நிகழ்வில் பங்கேற்று, 'நாங்கள் முழு ஒத்துழைப்புத் தருவோம்’ என்று ஸ்டாலின் சொன்னது வரவேற்கத்தக்கதுதானே?

நிச்சயமாக!

'ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமான உறவு மாப்பிள்ளைக்கும் மாப்பிள்ளைத் தோழனுக்குமான உறவு’ என்று பேரறிஞர் அண்ணா சொன்னதை, சுட்டிக்காட்டி ஸ்டாலின் பேசினார்.

இதில் வருத்தப்படத்தக்க விஷயம், எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் சபைக்கு வராதது. ஒரு பேரவைத் தலைவரை அவை முன்னவரும் எதிர்க் கட்சித் தலைவரும்தான் இணைந்து அழைத்துவர வேண்டும் என்பது மரபு. என்னதான் உதாசீனப் படுத்துபவர்களாக அ.தி.மு.க-வினர் இருந்தாலும், அவையின் கண்ணியத்தை தனது பங்கேற்பின் மூலமாக விஜயகாந்த் காட்டியிருக்க வேண்டும். 'அவர் நாண நன்னயம் செய்து விட’ விஜயகாந்த் தயங்குவது வருத்தத்துக்கு உரியது.

 பழனிச்சாமி, விருதுநகர்.

கழுகார் பதில்கள்!

கர்நாடக அரசு..?

அந்த மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்க வில்லை. கன்னடர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் அரசியல் கட்சிகளின் சுயநலமே ஆட்சி செலுத்துகிறது.

கழுகார் பதில்கள்!

தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9,000 கன அடி நீரை வழங்க வேண்டும் என்று பிரதமர் தலைமையிலான காவிரி நீர் ஆணையம் செப்டம்பர் 19-ம் தேதி உத்தரவிட்டது. இதை செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. சட்டத்துக்கு உட்பட்டு ஆட்சி நடத்துபவர்கள் என்றால், இந்த இரண்டையும் பின்பற்ற வேண்டும். ஆனால், இதை கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மதிக்கவே இல்லை. 'கர்நாடக மக்களின் நலன்தான் முக்கியம்’ என்கிறார்.

அப்படியானால், 'இந்திய’ மக்களின் நலனைப் பற்றி யார் பேசுவது? தேசியக் கட்சியான பாரதிய ஜனதா தலைமைதான் பதில் சொல்ல வேண்டும்.

 க.சுக்ரீவன், மதுரை.

கழுகார் பதில்கள்!

கிரானைட் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் ரெய்டு செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி மதிவாணனுக்கு தொழில்துறை அதிகாரி பதவி தரப்பட்டு, பறிக்கப்பட்டுள்ளதே?

இந்த ஆட்சியின் நிர்வாக நடைமுறைகள் எவ்வளவு கேலிக்கூத்தாக இருக்கின்றன என்பதற்கு உதாரணம் இது. ரெய்டு நடத்த உத்தரவிட்ட முதல்வரே, மதிவாணனுக்குப் பதவியையும் கொடுத்தார் என்பதை நம்ப முடியவில்லை. அவருக்குத் தெரியாமல் இது நடந்தது என்று சமாதானம் சொன்னால், தமிழ்நாட்டை நினைத்து வருத்தப்படுவதைத் தவிர வேறுவழி இல்லை.

 அரூர் மணி, விழுப்புரம்.

கழுகார் பதில்கள்!

'இனி என்றும் திராவிடக் கட்சிகளுக்கு பா.ம.க. துணை நிற்காது’ என்று தனது பேரன் திருமண விழாவில் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

தி.மு.க., .அ.தி.மு.க. ஆகிய இரண்டு அணிகளிலும் சேராமல் தன்னுடைய சுயத்தை டாக்டர் ராமதாஸ் இந்தத் தேர்தலில் காப்பாற்றுவார் என்று நினைக்கிறேன். அதனால்தான், பேரன் முகுந்தன் திருமணத்துக்கு தி.மு.க., அதி.மு.க. கட்சிகளைச் சேர்ந்த தலைகளைக் காணோம்.

 தமிழினியன், விழுப்புரம்.

கழுகார் பதில்கள்!

பொன்முடி குறித்து ஜூ.வி. எழுதிய செய்திக் கட்டுரையை விமர்சித்து முரசொலி தீட்டிய எதிர் விமர்சனத்தைப் படித்தீரா?

பார்த்தேன். பொன்முடி யோக்கியமானவர், கை சுத்தமானவர், அறத்துக்குப் புறம்பாக எந்த முறைகேட்டிலும் இறங்காதவர் என்று எழுதியிருப் பார்கள் என்று நினைத்துப் படித்து ஏமாந்தேன். 'யோக்கியன் வருகிறான்; சொம்பை எடுத்து உள்ளே வை’ என்று கிராமத்தில் சொல்வதைப் போல எழுதியிருக்கிறார்கள்.

பொன்முடியின் முன்ஜாமீன் மனுவை நிராகரித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதற்கு விளக்கம் அளித்திருப்பார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன்.

மூன்று எம்.ஏ. படித்தவருக்கு, அரசாங்கப் பதவியில் இருப்பவரின் சொந்த மகனுக்கு லைசென்ஸ் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படை விதிமுறைகூடத் தெரியாமல் போனதற்கு விளக்கம் இருக்குமென்று எதிர்பார்த்தேன். மனைவியையும் மருமகளையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிக்கப் போகிறது போலீஸ் என்றதும் 'தீரர்’ பொன்முடி திருவண்ணாமலையில் இருந்து ஓடி வந்தார் என்பதே உண்மை.

 முருகத்தமிழன், திண்டுக்கல்.

கழுகார் பதில்கள்!

இலங்கைத் தமிழர் தலைவர்கள் டெல்லி வந்துள்ளார் களே?

இந்தியத் தூதரகம் ஆட்டுவிக்கும் தலைவர்கள் என்று சொல்லுங்கள்!

கழுகார் பதில்கள்!