ச.கார்ல் மார்க்ஸ், சிவகாசி மேற்கு.

நீதிமன்றங்களின் 'வாழ்நாள் வாடிக்கையாளர்கள்’ என்ற விருதைப் பெறத் தகுதியானவர்கள் சாமியார்களா? அரசியல்வாதிகளா?

அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றங்கள், தாங்கள் புகழ்பெறுவதற்கான மேடை. ஆனால், சாமியார்களுக்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? சமீபகாலமாகத்தான் அதிலும் சறுக்கல்.

'ஒவ்வொரு மதமும் மனித இனத்துக்கு உதவி செய்துள்ளது. கிறிஸ்துவத்துக்கு முந்தைய பேகனிஸம் அழகின் ஒளியையும், வாழ்க்கையின் உயர்வையும் பலமுக முழுமையில் நாட்டத்தையும் அதிகரித்தது. புனிதமான அன்பு மற்றும் தானத்தைப் பற்றிய கண் ணோட்டத்தை கிறித்துவ மதம் தந்தது. புத்தமதம், மனிதன் ஞானியாக, மிருதுவாக, தூய்மையாக வாழ்வதற்கு உன்னத வழியைக் காட்டியது. ஜுடாயிஸம் மற்றும் இஸ்லாம், மதநம்பிக்கையுடன் செயலாற்றவும் கடவுளிடம் நிலையான பக்தி செலுத்தவும் கற்றுத் தந்தன. இந்து மதம், மிக உன்னத சக்தியான ஆன்மிக வழிமுறைகளை அளித்தது’ என்று ஒவ்வொரு மதத்திலும் உள்ள சிறப்பான பகுதிகளைத் தொகுத்துச் சொன்னார் ஸ்ரீஅரவிந்தர். ஆனால் இன்று, உன்னதங்களைச் சொல்லாமல் உலக வாழ்க்கையில் லயிப்பதைப் பற்றியே சாமியார்கள் பேச, வழிகாட்டத் தொடங்கியதன் விளைவாக அவர்களே நீதிமன்றங்களில் நிற்க வேண்டி விட்டது!

சம்பத்குமாரி, பொன்மலை.

குமாரபாளையத்தில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியைப் பாராட்டி, 'இன்றைய நிலைக்கு அன்றைய நிலை எவ்வளவோ தேவலை’ என்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பற்றி..?

ஆற்காட்டாரை தி.மு.க. தலைமை மறந்தாலும் தமிழ்நாடு மறக்கத் தயாராக இல்லை என்பது தெரிகிறது. இதில் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டிய ஒன்று உள்ளது.

அடுத்த ஐந்தாண்டு கழித்து, நத்தம் விஸ்வநாதன் படத்தைப் போட்டு, 'இன்றைய நிலைக்கு அன்றைய நிலை எவ்வளவோ தேவலை’ என்று சுவரொட்டி ஒட்டும் நிலைமையை உருவாக்காத ஒரு மின் மந்திரியைக் கொடு ஆண்டவா என்பதுதான்!

த.சிவாஜி மூக்கையா, தர்காஸ்.

அரசியலில் ஏமாளித்தனம் எது? கோமாளித்தனம் எது?

தலைவர்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவது ஏமாளித்தனம். அதன் எதிர்விளைவுகள் பற்றிக் கவலைப்படாமல் செயல்படுவது கோமாளித் தனம். இன்று, நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளிலும் நடப்பவை இவை இரண்டும்தான்!

ஸ்ரீஉஷா பூவராகவன், படியூர்.

'அறக்கட்டளை பணத்தில் முறைகேடு செய்ததாக கூறப்படும் புகாரை நிரூபித்தால் பதவி விலகத் தயார்’ என்று கூறுகிறாரே சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்?

புகாரை நிரூபிக்கும்வரை பொறுத்திருக்கத்தான் வேண்டும். ஆனால், இப்படி ஒரு சர்ச்சையில் சல்மான் குர்ஷித் சிக்கி இருப்பதே அவரது கௌரவத்துக்கு இழுக்கு. இந்தியாவின் மூன்றாவது குடியரசுத் தலைவராக இருந்த டாக்டர் ஜாகீர் உசேனின் பேரன் இவர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்து செயல்பட்ட குர்ஷித் ஆலம்கானின் மகன் இவர். ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தவர். ஆனால் அவரது தகுதி, திறமை அனைத்தும் களங்கப்பட்ட காங்கிரஸைக் காப்பாற்றுவதிலும் சப்பைக்கட்டு கட்டுவதிலுமே கழிந்துகொண்டு இருக்கிறது. இதனால், அவரது குடும்ப பாரம்பர்யமே கேள்விக்குறியாகி விட்டது!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

சேதுசமுத்திரத் திட்டம் தேவையில்லை என்று தமிழக அரசு கூறி இருப்பது பற்றி?

இந்தியாவின் வர்த்தக நலன்கள் மேம்பாடு அடையும் என்ற கோணத்தில் தமிழக அரசு

யோசிக்கவில்லை!

கதிர். செந்தில்குமார், நெல்லிக்குப்பம்.

செய்த தவறுக்காக அரசியல்வாதிகள் யாராவது வருந்தியது உண்டா?

அவசரநிலையை அமல்படுத்தி அரசியல் பழி வாங்கலைச் செய்த பிரதமர் இந்திரா காந்தி, அதற்காக சென்னைக் கடற்கரைக் கூட்டத்தில் (1.10.1979) பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்!

'நாங்கள் தவறு செய்து இருக்கிறோம். அதை உணர்ந்து நாங்கள் செய்த தவறுகளை ஏற்றுக்கொண்டு அந்தத் தவறுகளால் பாதிக்கப்பட்ட மக்களிடம் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். நாங்களும் மனிதர்கள்தான். மனிதர்கள் எல்லோரும் தவறு செய்யக் கூடியவர்கள்தான். தவறுகளைச் செய்த நான், நாட்டு மக்களுக்கு ஒரு உறுதிமொழியையும் தந்து இருக்கிறேன். அன்று நடைபெற்ற தவறு கள் மீண்டும் நடைபெறாது. நான் செய்த குற்றங்கள் என்று என்மீது சுமத்தப்பட்டவற்றில் பல காரியங்கள், என்னுடைய கவனத்துக்கே வராதவை ஆகும். ஆனால், பிரதமர் என்ற முறையில் அந்தக் காரியங்களுக்கும் தவறுகளுக்கும் முழுஅளவில் நான் தார்மீகப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறேன்’ என்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டத்தில் மன்னிப்புக் கேட்டார் இந்திரா. அகில இந்திய அளவில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய மிகமுக்கியமான நிகழ்வு அது!

வரதை. எஸ்.ஜோசப்ராஜ், சென்னை-83.

ஊழல் செய்து சிறைக்குச் சென்று வந்த சிலருக்கு நாடாளுமன்ற நிலைக்குழு பதவி அளிக்கப்பட்டுள்ளதே?

அவர்களை விட நாடாளுமன்றத்தை யாரால் நிலை நிறுத்த முடியும் என்று நினைக்கிறார்கள் போலும்!

ஸ்ரீஉஷாபூவராகவன், படியூர்.

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மக்கள் ஆதரவு தருவார்களா?

அரவிந்த் கெஜ்ரிவால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆவார், அவரது கட்சி நாடாளுமன்றத்தில் 50 தொகுதிகளைக் கைப்பற்றும், அடுத்து அவரை வைத்துத்தான் ஆட்சி சக்கரம் சுழலும் என்று யாரும் சொல்ல முடியாது. அப்படி எதிர்பார்ப்பதும் அபத்தம். ஆனால், காங்கிரஸுக்கு எதிராக அவர் பற்ற வைத்த நெருப்பு, அக்கட்சியின் அடித்தளத்தை கருக வைத்து விட்டது என்பது உண்மை. முறைகேடுகள், ஊழல்கள் செய்தால் அதற்கு எதிராக சாமான்யனும் திரளலாம் என்பதை அரவிந்த் ஆரம்பித்து வைத்துள்ளார். எனவே, அவரை மக்கள் ஆதரிக்காவிட்டாலும் அவர் சொல்லிவரும் கருத்துக்களை நிச்சயம் ஆதரிப்பார்கள்!

கு.மனோகரப்பாண்டியன், நாகர்கோவில்.

கைது செய்யப்படும் அரசியல்வாதிகள் பெரும்பாலும், 'சட்டப்படி சந்தித்து வெளியே வருவேன்’ என்று பேசுகிறார்களே. இது அவர்களது பலமா? சட்டத்தின் பலவீனமா?

இரண்டும் இல்லை. நீதிமன்ற விசாரணையில் உள்ள காலதாமதம்தான் இவர்களை அப்படிச் சொல்ல வைக்கிறது. இன்று கைது செய்யப்படும் அரசியல்வாதிக்கு, விசாரணை முடிந்து அடுத்த மாதமே தண்டனை கிடைத்துவிடப் போவது இல்லை. பத்துப் பதினைந்து ஆண்டுகள் கழித்து தீர்ப்பு வரப்போகிறது. அதுவரை தைரியமாக இருக்கலாம் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் இத்தகைய சவால் பேட்டிகள்!

அர்ஜுனன்.ஜி., திருப்பூர்-7.

'45 ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரமுடியாது’ என்று, மணிசங்கர் அய்யர் கூறி இருக்கிறாரே?

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் வேறு யாரோ தானே முதலமைச்சராக வரப்போகிறார்கள்... அந்த வயிற்றெரிச்சலின் குரலாக இருக்கலாம்!

பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.

'சிரிக்காத நரசிம்மராவ், தூங்கிக் கொண்டே இருந்த தேவகவுடா போன்றவர்கள் எல்லாம் பிரதமர் ஆகும்போது, புரட்சித் தலைவி அம்மா ஏன் பிரதமர் ஆகக்கூடாது’... என்று அமைச்சர் தங்கமணி கேட்கிறாரே?

ஏதோ ஒரு குறைபாடு இருக்கிறவர்கள்தான் அந்தப் பதவிக்கு வரவேண்டும் என்கிறாரா?