காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக தமி ழர்கள் பல்வேறு வகையில் எதிர்ப்புகளைக் காட்டிக் கொண்டிருக்க, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரான வேல்முருகன், கொட்டும் மழையில் நெய்வேலி அனல்மின் நிலையத்தை முற்றுகை இடும் போராட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார்.

தமிழ் உணர்வாளர்களும், கட்சித் தொண்டர்களும் ஒன்று சேர, செவ்வாய் சந்தையில் இருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு, போலீஸ் தடையையும் மீறி சுரங்கத்தை முற்றுகை இட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். மழையைப் பற்றிக் கவலைப்படாமல் மைக் பிடித்த வேல்முருகன், ''உச்ச நீதிமன்றம் மற்றும் பிரதமர் தலைமையில் கூடிய நதிநீர் ஆணையத்தின் தீர்ப்புப்படி தமிழகத்துக்கு 250 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடகா நிச்சயம் தரவேண்டும். மத்தியில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருக்கும் எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக வெளியுறவுத் துறை அமைச்சராகத்தான் செயல்படுகிறார். மத்திய அரசு ராணுவத்தை அனுப்பி போர்க்கால நடவடிக்கையாக உடனே தமிழகத் துக்குத் தண்ணீர் திறந்துவிடவேண்டும். இல்லை என்றால், டெல்டா பகுதிகளில் 15 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிப்புக்கு உள்ளாகும்.

தமிழகத்தில் நிலவும் கடுமையான மின்வெட்டால் மருத்துவமனைகளில் மருந்துகளைக் கூட பாதுகாக்க முடியாமல் தவிக்கின்றனர். தமிழர்களின் வியர்வையாலும், ரத்தத்தாலும் தயாரிக்கப்பட்ட மின்சாரத்தை இனி ஒரு போதும் கர்நாடகத்துக்குக் கொடுக்க அனுமதிக்க மாட்டோம். தமிழகம் முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களையும், தமிழ் உணர்வாளர்களையும் திரட்டிப் போராடுவோம். கர்நாடகத்துக்குச் செல்லும் மின்சாரத்தைத் தடுக்க லட்சக் கணக்கான பேர்தேவைஇல்லை. நான்கு பேரே போதும்!'' என்று சஸ்பென்ஸ் வைத்து எச்சரிக்கை விடுத்தார்.

''எங்க தலைவர் போராட்டத்துக்கு நாள் குறிக்கும் போது, மழை இல்லாமல் இருந்தது. இப்போ, தமிழ்நாடு முழுக்க போதும்போதும்னு சொல்ற அளவுக்கு மழை. இதுவே எங்களுக்குக் கிடைச்ச வெற்றிதான். மழையையும் மீறி இந்த முற்றுகைக்கு ஏராளமான தொண்டர்கள் வந்தது எங்கள் கட்சியின் செல்வாக்கு வளர்ந்திருப்பதைத்தான் காட்டுகிறது'' என்று துள்ளிக்கொண்டு சென்றனர் தமிழக வாழ்வுரிமை கட்சியினர்.

கடைசி வரை, மாநில அரசைப் பற்றி ஒரு வார்த்தை கூட வேல்முருகன் பேசவே இல்லை. ஓஹோ.... அந்தப் பக்கம்தான் கூட்டணியா?

- க.பூபாலன்

படங்கள்: எஸ்.தேவராஜன்