கட்சி தாவும் கலாசாரத்துக்குள் நுழைந்துவிட்ட சிவப்புச் சட்டைக்காரர்களின் சடுகுடு ஆட்டம் தொடர்கிறது. கடந்த 21.10.2012 ஜூ.வி. இதழில் 'தா.பா. செய்வதெல்லாம் தவறு - இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு குட் பை சொன்ன தர்மபுரி தோழர்கள்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தோம். இந்தநிலையில், தர்மபுரிக்கு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன், இதுகுறித்து தனது கருத்துக்களை ஆவேசமாக எடுத்து வைத்தார்.

''கடந்த 15-ம் தேதி தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் நடந்த விழாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய 6,000 தோழர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாகச் சொன்னார்கள். அது, போலிக்கணக்கு. உண்மையில், எங்கள் கட்சியில் இருந்து 400 முதல் 600 பேர்தான் சென்றனர். ஆனால், அவர்கள் சொன்ன மிகையான எண்ணிக்கை பெரும்பாலான ஊடகங்களில் செய்தியாக வந்துவிட்டது. அதனால், அவர்களின் மோசடியை அம்பலப்படுத்தி உண்மையைச் சொல்லத்தான் தர்மபுரிக்கு வந்தேன்.

சுமார் 24 ஆண்டுகள் தொடர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தர்மபுரி மாவட்டச் செயலாளராக இருந்தவர் இளம்பரிதி. அவர் தான் இப்போது வெளியேறி இருக்கிறார். இதுவரை வேறு யாருக்குமே கிடைக்காத வாய்ப்பு இது. இத்தகைய எல்லையைத் தொட்டபிறகு, அவர் மாநிலப்பொறுப்புக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டு வளர்ந்திருக்க வேண்டும். அவரிடம் இருந்த பொறுப்பை இளையவர்களிடம் கொடுத்து வழிவிட்டு இருக்க வேண்டும். மேலும், நீண்டகாலமாக மாவட்ட மாநாட்டை நடத்த விடாமலும் தடைசெய்துகொண்டு இருந்தார். அதன்பிறகே, தலைமை அமைத்த குழுவின் முடிவுப்படி மாநாடு நடத்தப்பட்டு, பெரும்பான்மை செல்வாக்கு கொண்டிருந்த நஞ்சப்பன் சமீபத்தில் புதிய மாவட்டச் செயலாளர் ஆனார். மற்ற சில பொறுப்புகளுக்கும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர். 24 ஆண்டுகளாக வகித்து வந்த பதவி பறிபோனதை இளம்பரிதியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், கோபப் பட்டு, அவரது ஆதரவாளர்களுடன் கட்சித் தாவல் நடத்தி இருக்கிறார்.

அவர் வெளியேறியதும், இளம்பரிதியின் செயல்பாடு பிடிக்காமல் எங்கள் கட்சியை விட்டு இதுவரை விலகிஇருந்த 50-க்கும் மேற்பட்ட தோழர்கள் சி.பி.ஐ-க்கு மீண்டும் திரும்பி இருக்கின்றனர். இன்னும் பல தோழர்கள் வர இருக்கிறார்கள்.

அடுத்தது, தேவ.பேரின்பன் தொடர்பான ஒரு விஷயம். 'கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்ற பெயரில் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலினை, பல ஆண்டுகளுக்கு முன்பே கிருஷ்ணய்யா என்ற மூத்த தோழர் சிறப்பாக மொழிபெயர்த்து இருந்தார். அது, பழைமை வடிவத்தில் இருப்பதாகக் கூறி அதில் சில வெட்டல், ஒட்டல் வேலைகளைச் செய்து, தானே மொழிபெயர்த்ததாக ஒரு நூலை வெளியிட்டார் பேரின்பன். அந்த நூலில் சர்ச்சையைக் கிளப்பிய இன்னொரு விஷயம், 'நுழைவாயில்’ என்ற பெயரில் அவர் எழுதியிருந்த முன்னுரை. மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் கருத்துகளுக்கு முன்னுரை எழுதும் அளவுக்குத் தகுதி கொண்டவர்கள் யாருமே இல்லை. ஆனாலும், நூலுக்கு முன்னுரை எழுதி தன்னை பெரிய சிந்தனையாளராகக் காட்டிக் கொண்டார். அதேபோல், 'குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற பிரடெரிக் ஏங்கெல்ஸ் எழுதிய நூலையும் மொழிபெயர்த்து அதில் 'தமிழ் பதிப்புக்கான முன்னுரை’ என்று ஒன்றை எழுதி இருந்தார். குறிப்பாக அதில், 'தொப்புள்கொடி உறவுகள் மீதான சமூக உணர்வு...’ என்பது போன்ற கருத்துக்களை ஏங்கெல்ஸ் அன்றே எழுதியதாக சில திணிப்புகளையும் செய்திருந்தார். இதெல்லாம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுகுறித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் தலைமை கண்டித்தபோது, பேரின்பன் கட்சியுடன் முரண்பட்டு நின்றார். இளம்பரிதி, பேரின்பன் உள்ளிட்டோர் கட்சியின் விதிமுறையை மீறி நடந்தனர். மேலும், கட்சிக்கு எதிராக நீண்ட காலமாகவே சதித்திட்டம் போட்டிருக்கிறார்கள். அதனால்தான், ஓர் ஆண்டுக்கு முன்பே தர்மபுரி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை அறக் கட்டளையாக மாற்றி விட்டனர்.

இப்படியான குற்றப்பின்னணி கொண்டவர்களை தங்கள் கட்சியில் இணைப்பதற்கு முன், தர்மபுரி மாவட்ட மார்க்சிஸ்ட் கட்சி யோசித்திருக்க வேண்டும். 'மற்றொரு கட்சியின் அலுவலகத்தை அபகரித்துக் கையில் வைத்துக்கொண்டு இங்கே வரவேண்டாம்’ என்று இளம்பரிதி தரப்புக்கு மார்க் சிஸ்ட் கட்சி அறிவுறுத்தி இருக்க வேண்டும். எது எப்படியானாலும், இவர்களின் வெளிநடப்பால் தர்மபுரியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியே காணாமல் போனது போல இளம்பரிதி தரப்பு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இது உண்மை அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார் ஆதங்கத்துடன்.

ம்... அடுத்து?

- எஸ்.ராஜாசெல்லம்