Published:Updated:

ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுவதா?: ராகுலுக்கு பா.ஜ.க. கண்டனம்

Vikatan Correspondent
ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுவதா?: ராகுலுக்கு பா.ஜ.க. கண்டனம்
ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுவதா?: ராகுலுக்கு பா.ஜ.க. கண்டனம்
ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டுவதா?: ராகுலுக்கு பா.ஜ.க. கண்டனம்

பெங்களூர்: ஹிட்லருடன் மோடியை ஒப்பிட்டு பேசிய ராகுல் காந்தியின் பேச்சு முட்டாள் தனமானது என்று பாஜக மூத்த தலைவர் வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஹிட்லருடன் நரேந்திர மோடியை ஒப்பிட்டு பிரசார பொதுக் கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடு பெங்களூரில் நிருபர்களை சந்தித்தார்.

அப்போது, ''ஹிட்லருடன் நரேந்திர மோடியை ஒப்பிட்டு ராகுல் காந்தி பேசி இருப்பது முட்டாள் தனமானது. காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நெருக்கடி நிலையை அமல்படுத்தி லட்சக்கணக்கான அரசியல் கட்சி நிர்வாகிகளையும், தலைவர்களையும் சிறையில் அடைத்தனர். மகாத்மா காந்தி கொலையை, ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புபடுத்தி ராகுல் காந்தி பேசி இருக்கிறார். காங்கிரஸ் கட்சிதான் மகாத்மா காந்தியின் கொள்கைகளை தினம் தினம் கொலை செய்கிறது.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு மகாத்மா காந்தி வெளிப்படுத்திய முதல் கருத்து, காங்கிரசை கலைக்க வேண்டும் என்று சொன்னார். காந்தி கூறிய எதையும் அவர்கள் செயல்படுத்தவில்லை. அதைப்பற்றி கவலைப்படுவதும் இல்லை. நரேந்திர மோடி தடுக்க முடியாத தலைவராக உள்ளார். தொட முடியாத கட்சியாக காங்கிரஸ் மாறி வருகிறது. காங்கிரசுடன் இருக்க யாரும் விரும்பவில்லை.

தொட முடியாது என்ற வார்த்தையை நாங்கள் விரும்பாதபோதும், காங்கிரஸ் தொட முடியாதபடி மாறி வருகிறது. காங்கிரஸ் கீழ்தரமான, மலிவான அரசியல் செய்கிறது. காங்கிரஸ் கட்சியினர் நம்பிக்கையை இழந்துவிட்டதால் வாய்க்கு வந்தபடி தரம் தாழ்ந்து பேசுகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு ஷீலா தீட்சித்தை கேரள மாநில கவர்னராக நியமித்தது சரியல்ல. இது அனைத்து நெறிமுறைகளுக்கும் எதிரானது.

காமன்வெல்த் முறைகேடுகளில் இருந்து அவரை காப்பாற்றவே கவர்னராக நியமித்து உள்ளனர். பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் இதுபோன்ற நியமனங்களை மறுபரிசீலனை செய்வோம். வாரணாசி தொகுதி ஒதுக்கீட்டில் பிரச்னை இருப்பதாக கூறுவது தவறு. கட்சி எடுக்கும் முடிவை அனைவரும் பின்பற்றுவார்கள். கருத்துவேறுபாடு இல்லை. ஊடகங்களில் மட்டும் தான் இதுபோன்று சொல்லப்படுகிறது" என்று கூறினார்.