Published:Updated:

குஜராத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்: ராகுல் காந்தி கடும் தாக்கு!

Vikatan Correspondent

பாலசினார்: குஜராத் மாநிலத்தில் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று ராகுல் காந்தி கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

குஜராத் மாநிலம் பாலசினார் நகரில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட ராகுல் காந்தி, ''குஜராத் விவசாயிகளின் உழைப்பையும் அவர்களின் நிலத்தையும் நரேந்திர மோடி அரசு அபகரித்து வருகிறது.

மேலும், குஜராத்தில் மோடி தலைமையில் ஹிட்லரைப் போன்ற சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது. நரேந்திர மோடி அரசு குஜராத்தில் உள்ள லட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களை தொழிற்சாலைகளாக மாற்றி வருகிறது. இதை எதிர்க்கும் விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.

2004 ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பின் குஜராத் மாநிலம் முன்னேறியுள்ளதாக மோடி கூறினாலும், உண்மையில் முன்னேறியது பெரும் செல்வந்தர்கள் மட்டுமே" என்றும் அவர் கடுமையாக தாக்கி பேசினார்.