Published:Updated:

சோனியாவிற்கு எதிராக போட்டியிட மாட்டேன்: ஆம் ஆத்மி சாஜியா அறிவிப்பு

Vikatan Correspondent
சோனியாவிற்கு எதிராக போட்டியிட மாட்டேன்: ஆம் ஆத்மி சாஜியா அறிவிப்பு
சோனியாவிற்கு எதிராக போட்டியிட மாட்டேன்: ஆம் ஆத்மி சாஜியா அறிவிப்பு
சோனியாவிற்கு எதிராக போட்டியிட மாட்டேன்: ஆம் ஆத்மி சாஜியா அறிவிப்பு

புதுடெல்லி: "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போட்டியிட மாட்டேன்" என்று ஆம் ஆத்மி கட்சியின் மூத்த பெண் தலைவர் சாஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதனிடையே, ஆம் ஆத்மி கட்சியின் மூத்த பெண் தலைவர் சாஜியா இல்மி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக போட்டியிடலாம் என்று தகவல்கள் வெளியாகின. கட்சியும் அவரை நிறுத்த விரும்புகிறது என்று கூறப்பட்டது.

இந்நிலையில்  தனது ட்விட்டர் இணையதளத்தில் கருத்து பதிவு செய்துள்ள சாஜியா இல்மி, "நான் ரேபரேலி தொகுதியில் போட்டியிட மாட்டேன். நான் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை; இனியும் இதனை செய்ய மாட்டேன்" என்று  கூறியுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களாக கூறப்பட்ட தகவல்களை மறுப்பதாகவும் சாஜியா இல்மி தெரிவித்துள்ளார்.

சாஜியாவிற்கு டெல்லியை விட்டு வேறு மாநிலத்தில் சென்று போட்டியிட விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே டெல்லி சட்டசபைத் தேர்தலில் இல்மி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே டெல்லி வேட்பாளர்கள் பெயரை அறிவித்துவிட்டது.