Published:Updated:

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி!

Vikatan Correspondent
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான  மத்திய அரசின் மனு தள்ளுபடி!
வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான மத்திய அரசின் மனு தள்ளுபடி!

புதுடெல்லி: வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்ததை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு குறைப்புக்கு எதிரான  மத்திய அரசின் மனு தள்ளுபடி!

வீரப்பன் கூட்டாளிகள் உள்பட 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தண்டனையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அனைவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த ஜனவரி 21ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதையடுத்து, வீரப்பன் கூட்டாளிகளின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது.

இந்த  மனு மீதான விசாரணை இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி, மத்திய அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.