Published:Updated:

புதுச்சேரி தொகுதிக்கான என்.ஆர்.காங். வேட்பாளர் அறிவிப்பு!

Vikatan Correspondent
புதுச்சேரி தொகுதிக்கான என்.ஆர்.காங். வேட்பாளர் அறிவிப்பு!
புதுச்சேரி தொகுதிக்கான என்.ஆர்.காங். வேட்பாளர் அறிவிப்பு!
புதுச்சேரி தொகுதிக்கான என்.ஆர்.காங். வேட்பாளர் அறிவிப்பு!

புதுச்சேரி:  புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இந்நிலையில் தங்கள் கட்சியின்  புதுச்சேரி தொகுதி வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் ராதாகிருஷ்ணன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவரும், மாநில முதலமைச்சருமான ரங்கசாமி இன்று அறிவித்துள்ளார்.

புதுவை மாநில வளர்ச்சிக்காக பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறோம் என்றும் ரங்கசாமி மேலும் கூறினார்.