Published:Updated:

மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவு!

Vikatan Correspondent
மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவு!
மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவு!
மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவு!

புதுடெல்லி: பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்து நாளை முடிவெடுக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடைபெறவுள்ள நடாளுமன்ற தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமான ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நாடு முழுவதும் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 450 தொகுதிகளில் போட்டியிட பா.ஜ.க. முடிவு செய்துள்ளது.

இதில் ஏற்கனவே 106 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 344 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் குறித்து முடிவெடுப்பதற்காக நாளை பா.ஜ.க. தேசிய தேர்தல் கமிட்டி கூட்டம் நாளை டெல்லியில் கூடுகிறது.

இந்த கூட்டத்தின்போது, அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் முடிவெடுக்கப்படும் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

நரேந்திர மோடி 2 தொகுதிகளில் போட்டியிடுவார் எனவும், உத்தரபிரதேசத்தில் வாரணாசி மற்றும் குஜராத்தில் வதோரா அல்லது கிழக்கு அகமதாபாத் ஆகிய  இரண்டு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, உத்தரபிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் கடந்த தேர்தலின் போது போட்டியிட்டு வெற்றி பெற்ற முரளி மனோகர் ஜோஷி, மோடிக்கு அந்த தொகுதியை விடுக்கமாட்டார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன.