Published:Updated:

விஜயகாந்த் பிரசாரம் தொடங்கும் முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்!

Vikatan Correspondent
விஜயகாந்த் பிரசாரம் தொடங்கும் முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்!
விஜயகாந்த் பிரசாரம் தொடங்கும் முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்!
விஜயகாந்த் பிரசாரம் தொடங்கும் முன் தே.மு.தி.க. வேட்பாளர் பட்டியல்!

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்குவதற்கு முன்பாகவே, அக்கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை, கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, அக்கட்சி சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட முடிவு எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், வரும் 14ஆம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் விஜயகாந்த், முதலில் திருவள்ளூர் தொகுதிக்குட்பட்ட கும்மிடிப்பூண்டியில் பிரசாரம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

மேலும், கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து தேர்தல் பணியாற்றுவது மற்றும் நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து நாளை சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.