எஸ்.தாமஸ், கோவை-27.

அன்று அண்ணாவுக்கு அருகில் இருந்த நண்பர்கள்... இன்று கருணாநிதிக்கு அருகில் இருக்கும் நண்பர்கள். ஒப்பிடுங்கள்?

அண்ணா மறைவுக்குப் பிறகு நடந்த திருச்சி மாநில மாநாட்டில் கருணாநிதி உருக்கமாக ஒன்றைக் குறிப்பிட்டார்.

''பேரறிஞர் அண்ணா அவர்களே!... 'தம்பி வா! தலைமை ஏற்க வா!’ என்று அழைத்து ஆணையிட்டதும் ஓடிவந்த நாவலர் இங்கே இருக்கிறார். மதியழகனுக்கு எப்போதுமே பிடிவாதக் குணம் அதிகம். ஆனாலும், தான் நினைத்ததைப் பேசி நம்மைக் கவர்ந்து தன் பக்கம் இழுக்கத் தவற மாட்டார் என்று புகழ்வீர்களே... அந்த மதி இங்கே இருக்கிறார். சிற்றரசு பேசினால் நான் குலுங்கக் குலுங்கச் சிரித்து விடுகிறேனடா தம்பி என்பீர்களே... அந்த சிற்றரசு இங்கே இருக்கிறார். பக்கத்தில் என்.வி.என். அமர்ந்து வெற்றிலை மடித்துத்தர அதை வாங்கி வெற்றிச் சிரிப்போடு வாய் குழையக் குழையப் போட்டுக்கொள்வீர்களே... அந்த என்.வி.என். இங்கே இருக்கிறார். ஆழமாகச் சிந்திப்பதும், அமைதியாக இருப்பதும் ஆணித்தரமாக வாதிடுவதும் அன்பழகனின் இயல்பு என்று பாராட்டுவீர்களே... அந்த பேராசிரியர் இங்குள்ளார். 'என்ன முத்து கோபமாக வருகிறாயா? உட்கார்’ என்று புன்னகை தவழச் சொன்னதும், கோபத்தை எல்லாம் மறந்துவிட்டுக் குளிர் முகத்தோடு எதிரே அமர்வாரே.... அந்த முத்து இங்கு இருக்கிறார். நீங்கள் செய்யும் குறும்பைத் தாங்கிக்கொள்ளும் மன்னை இங்கே இருக்கிறார். அன்பில் கண்ணைக் காட்டச் சொல்லி ரசிப்பீர்களே... அந்த அன்பில் தர்மலிங்கம் இங்கே இருக்கிறார். 'சென்று வா தம்பி வென்று வா’ என்று கல்லக்குடி போராட்டத்துக்கு நீங்கள் அனுப்பிய கருணாநிதி இதோ இருக்கிறேன். எல்லோரும் இங்கே இருக்கிறோம். நீங்கள் எங்கே அண்ணா போய்விட்டீர்கள்?'' என்று கேட்டார் கருணாநிதி. அந்தக் காலம் வேறு. இந்தக்காலம் வேறு. இதை ஒப்பிடுவது தவறு என்பதைக் கருணாநிதியே ஒப்புக்கொள்வார்!

எஸ்.புருஷோத்தம் ராஜன், பரமக்குடி.

ஆற்காடு வீராசாமியின் மின்வெட்டுக்கும் நத்தம் விஸ்வநாதனின் மின்வெட்டுக்கும் என்ன வித்தியாசம்?

யார் வெட்டினாலும் வெட்டு, வெட்டுத்தான். அதில் வித்தியாசம் இல்லை!

ஆனால், ஆற்காடு வீராசாமிக்கு கொஞ்சமாவது உறுத்தல் இருந்தது. 'என்னால்தான் தி.மு.க. ஆட்சிக்கு கெட்ட பெயர். ஒருவேளை, நாம் தோற்றால் இந்த மின்வெட்டுதான் முக்கியமான காரணமாக இருக்கும்’ என்று, வேலூரில் வெளிப்படையாகவே பேசினார் ஆற்காட்டார். ஆனால், நத்தம் விஸ்வநாதனுக்கு அந்த மாதிரி எந்தக்கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. அது வேற டிபார்ட்மென்ட் மேட்டர், அதுவும் பக்கத்து ஸ்டேட் மேட்டர் என்று நினைப்பது போலவே மெத்தனமாக இருக்கிறார்!

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

மதுரை ஆதீனம் - நித்தியானந்தா சர்ச்சை ஒருவழியாக சுமுகமாக முடிந்திருப்பது குறித்து...?

ஏற்கெனவே வாங்கிச் சேர்த்த கெட்ட பெயரைத் துடைப்பதற்காக மதுரை அருணகிரியோடு ஐக்கியம் ஆனார் நித்தியானந்தா. ஆனால், மதுரையில் இப்படி ஒரு எதிர்ப்பு கிளம்பும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. கர்நாடக அரசைப் போல தமிழக அரசு செயல்படாது என்றும் நினைத்தார் நித்தி. இரண்டுமே அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக நடந்தது. எனவே, வேறுவழி இல்லாமல் ஓட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அருணகிரியைப் பொறுத்தவரை, நித்தியை இனியும் வைத்திருந்தால் முதலுக்கே மோசம் வந்து மடமே பறிபோகும் கவலை. ஒருவருக்கொருவர் ஆபத்பாந்தவர்களாக நினைத்துக் கட்டி அணைத்தனர். இருவருக்குமே ஷாக் அடித்ததால் விட்டு விலகி விட்டனர். இருவரும் பிரிந்துவிட்டதாலேயே பிரச்னை முடிந்து விடும் என்று அர்த்தம் அல்ல. மடத்தைக் காப்பாற்றுவதற்கு அருணகிரியும், தன்னைக் காப்பாற்றிக்கொள்ள நித்தியும் இனி தனித்தனியாகப் போராடப் போகிறார்கள். அவ்வளவுதான்!

சீர்காழி சாமா, தென்பாதி.

அரசியலில் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர் என்று யாரைக் கூறலாம்?

அரசியலைப் பொறுத்தவரை குருவுக்கு மிஞ்சிய சிஷ்யர்கள் அதிகம். தீரர் சத்தியமூர்த்தியைக் குருவாக ஏற்றுக்கொண்டவர் காமராஜர். சத்தியமூர்த்தி அரசியல் ரீதியாக அடைய முடியாத அனைத்துப் பதவிகளையும் காமராஜர் அடைந்தார். பேரறிஞர் அண்ணா, முதல்வர் ஆக காலம் ஒரு முறைதான் அனுமதித்தது. அவரது சிஷ்யர் கருணாநிதிக்கு ஐந்து முறை வசப்பட்டது. இப்படி எத்தனையோ உதாரணங்களைச் சொல்லலாம்.

'தரையில் நின்று பார்க்கிறார் குரு. அவரது தோளில் உட்கார்ந்து பார்க்கிறார் சிஷ்யன்’ என்பார்கள். எனவே, கூடுதலாகத்தானே எல்லாம் கிடை க்கும்?

காயல் எஸ்.ஏ.நெய்னா, சென்னை-3

மனம் திறந்து சொல்லுங்கள்... இனியும் தமிழ்நாட்டுக்கு கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் தலைமை தேவையா?

அவர்களது இடத்தைப் பிடிக்கும் வலிமையை யாரும் பெறவில்லையே. அப்புறம் என்ன செய்ய? நிறுவன பலம், தொண்டர் பலம் இரண்டும் இந்த இரண்டு கட்சிகளுக்கு மட்டும்தானே இருக்கிறது!

பொட்டல் பரமசிவன்.

அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் லஞ்சம் பெற முடியாது. அப்படி இருக்க அமைச்சர்களைக் குற்றம் சாட்டுவதை விடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தினால் ஊழல் ஒழியுமா?

அதிகாரிகளின் ஒத்துழைப்பு இல்லாமல் அரசியல்வாதிகளால் ஊழல் செய்ய முடியாது என்பது முழுஉண்மை. இன்னும் சொன்னால், அரசியல்வாதிகளுக்கு சந்துபொந்துகளை அடையாளம் காட்டுபவர்கள் அதிகாரிகள்தான். என்ன பிரச்னை வந்தாலும் அரசியல்வாதிகள்தானே மாட்டிக்கொள்ளப் போகிறார்கள் என்ற மெத்தனமும் அதிகாரிகளுக்கு உண்டு. இவர்களை சட்டத்தின் முன் நிச்சயம் நிறுத்த வேண்டும். ஊழல் அதிகாரிகளைக் கைது செய்வது ஊழலைக் குறைக்க நிச்சயம் உதவும்!

போடி.எஸ். சையது முகமது, சென்னை-93

'இரண்டொரு நாட்களில் நானே விலகுவதாக இருந்தேன்’ என்கிறாரே நித்தியானந்தா. அது உண்மையா?

பொய். நித்தியை ராஜினாமா செய்யச்சொல்லிவிட்டார் அருணகிரி. முதலில் ஒப்புக்கொண்ட நித்தி, அப்புறம் மறுத்து விட்டார். 'நீதிமன்றத்தில் வழக்கு முடியும்வரை நான் பதவியில் தொடர்கிறேன்’ என்று சொன்னார். அதை அருணகிரி ஏற்காமல் நீக்கி விட்டார் என்பதுதான் உண்மை!

அ.கார்த்திகேயன், சேலம்.

இன்றைய அரசியல் சூழலைக் கருதி தேர்தலில் வாக் களிக்காமல் அடியோடு தேர்தலைப் புறக்கணிப்பது சரியான அணுகுமுறையா?

ஜனநாயக கடமையை ஆற்றுவதில் இருந்து தள்ளி நிற்க வேண்டாம். மிகமிக மோசமானவர் தேர்ந்து எடுக்கப்படுவதையாவது உங்களது வாக்கு தடுக்கலாம் அல்லவா? அது நன்மைதானே! உங்களது வாக்கு கள்ளவாக்காக மாறுவதைத் தடுப்பதுகூட ஜனநாயகக் கடமைதான்!

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்.

காமராஜரால் அடைய முடியாத பிரதமர் பதவியை, மூப்பனாரால் முடியாத பிரதமர் பதவியை, ஜெயலலிதாவால் அடைய முடியுமா?

காமராஜரைத் தேடிவந்தது பதவி. அவர்தான் மறுத்தார். மூப்பனாரைச் கொண்டுவர சிலர் முயற்சித்தனர். சிலர் தடுத்தனர். ஜெயலலிதா பற்றிச் சொல் வதற்கான காலம் இன்னமும் கனியவில்லை. ஆனால் அ.தி.மு.க-வினர், அம்மாவை டெல்லிக்கு 'பேக்’ பண்ணுவதில்தான் ஆளுக்கு ஆள் அதீத ஆர்வமாக இருக்கிறார்களே!

எஸ்.தியாகராஜன், சின்ன சொக்கிகுளம்.

காவல்துறையை நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் என்ன?

அகில இந்திய அளவில் ஆட்சியாளர்களும் சட்ட வல்லுநர்களும் பரிசீலிக்க வேண்டிய யோசனை இது!