Published:Updated:

தலையங்கம் - நல்லவேன்ன்டா..!

தலையங்கம் - நல்லவேன்ன்டா..!

பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம் - நல்லவேன்ன்டா..!

ரும்பிலே ஓர் இதயம் முளைத்தால்..? அதுதான் தமிழன்! எவ்வளவுதான் அடித்தாலும் தாங்கிக்கொண்டே இருக்கும் தன்னிகரற்ற மன பலம்கொண்ட... ரொம்ப்ப்ப நல்லவன்!

 இருக்கும் நேரத்தைவிட, இல்லாத நேரமே அதிகம் என்றாகிவிட்ட மின்சாரத்துக்கு அவன் ஈடுகொடுத்து வாழப் பழகிவிட்டான். பால் விலையை ஏற்றினாலும் தாங்குகிறான்... பேருந்துக் கட்டணத்தை ஏற்றினாலும் தாங்குகிறான்... மின்சாரமே கொடுக்காமல் மின் கட்டணத்தை ஏற்றினால், அதையும்கூட சமூக வலைதளங்களில் காமெடி ஆக்கிக் களிக்கின்றான்.

'இந்த மின் வெட்டுத் துன்பத்துக்குக் காரணம், கடந்த ஆட்சியாளர்கள்தான். அவர்கள் செய்துவைத்த குழப்பங்களைத் தீர்த்து, உங்களுக்கெல்லாம் ஒளிமயமான வாழ்க்கை கொடுக்க எங்களுக்கு இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை' என்று தொலைக்காட்சியில் தோன்றி முதல்வர் வாய்தா கேட்டால், 'எங்க ஊர்ல மின்சாரம் இல்லை... அம்மா அப்படி என்னதான் சொன்னாங்க?' என்று சென்னைப் பட்டணத்தில் இருக்கும் தன் சொந்தக்காரரிடம் தொலைபேசியில் விசாரித்து பொது அறிவை வளர்த்துக்கொள்கிறான்.

'மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும் முதல்வர், தமிழ்நாட்டின் எதிர்க் கட்சிகளுக்கும் அதுபோல ஒரு கடிதம் போட்டால், நாங்களும் சேர்ந்து மத்திய அரசிடம் மின்சாரம் கேட்டு வலியுறுத்தத் தயார்' என்று உலகத்திலேயே மிகப் புதுமையான ஓர் அரசியல் கோட்பாட்டை வகுத்துக் கொடுக்கும் முன்னாள் முதல்வரின் மதியூகத்தைப் பார்த்துத் தமிழன் புல்லரித்துப்போகிறான்.

அனுமன் தன் பலத்தை அடுத்தவர் சொல்லித்தான் தெரிந்துகொண்டார் என்பது ஐதீகம். அந்த வகையில், 'உனது பலத்தை உனக்கு உணர்த்தவே யாம் அவதரித்தோம்' என்று சொல்லாலும் செயலாலும் நிரூபித்துவரும் அரசியல் தலைவர்களுக்கு அருமைத் தமிழனின் அன்பான தீபா'வலி' வாழ்த்துகள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு