Published:Updated:

முதல்வரின் ஒரு நாள்!

முதல்வரின் ஒரு நாள்!

முதல்வரின் ஒரு நாள்!

முதல்வரின் ஒரு நாள்!

Published:Updated:

ற்ற அரசியல் தலைவர்கள் ஒரு நாளில் என்ன செய்வார்கள் என்று ஓரளவு தெரியும். ஆனால், தனக்குத்தானே இரும்புத் திரை போட்டுக்கொண்ட ஜெயலலிதாவின் 'ஒரு நாள்’ நமக்குத் தெரியுமா? யோசிக்கும்போதே, 'அட ஆமாம்ல’ என்று தோணுதுதானே!

தமிழகத்தின் முதல்வர், மாபெரும் கட்சியின் பொதுச் செயலாளர் என்று ராஜ அலங்காரம் செய்யப்பட்ட தேராக இருந்தாலும், ரத வீதிகளில் வலம் வராமல் தேரடியிலேயே ஜெயலலிதா இருப்பது ஆச்சர்யம்தான். முதல்வராக இல்லாதபோது அவரது செயல்பாடுகள் இதைவிட இன்னும்

முதல்வரின் ஒரு நாள்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சுருக்கம்தானே! அதிகாலை 4 மணிக்கெல்லாம் எழுந்துவிடுவது ஜெ-யின் வழக்கம். முதல்வரைத் துயிலெழுப்ப வேண்டும் என்ற அக்கறையுடன் பூங்குன்றன், சுரேஷ் உள்ளிட்ட உதவியாளர்கள் முறையே 3.50, 3.55 என்று அடுத்தடுத்த நேரங்களில் அலாரம் வைத்துக்கொள்வார்களாம்.

சூர்யோதயத்துக்கு முன்பு பிரார்த்தனைப் பாடல்கள், கொஞ்ச நேரம் தியானம். மெல்லிய ஒலியில் பஜகோவிந்தப் பாடல் கேட்பது முதல்வருக்கு விருப்பமான ஒன்று. வெறும் வயிற்றில் துளசி கலந்த நீரைப் பருகுவார். அதற்குள் சூரியன் உதயமாகிவிட்டால் பெரும்பாலும் அகன்ற ஜன்னலின் வழியே அல்லது பால்கனி வழியே சூரிய நமஸ்காரம் செய்வாராம். முந்தைய நாள் ஜெயலலிதா உறங்கச் சென்ற பிறகு நடந்த முக்கிய நிகழ்வுகள் குறித்த தகவல்கள் ஹைடெக் ஆங்கிலத்தில் சின்னச் சின்ன வரிகளில் அவரது டேபிளில் தயாராகி இருக்கும். அதன் பிறகு நாளிதழ்களில் முதல்வர் மற்றும் அரசின் செயல்பாடுகள் குறித்த செய்திகள் மற்றும் விமர்சனங்கள் குறித்த கட்டிங்குகள் வந்து சேரும். மொபைல் போன் உபயோகிப்பதைப் பெரிதும் விரும்பாதவர் ஜெயலலிதா. லேண்ட்லைன் போனில்தான் பேச விரும்புவார். பூங்குன்றன் தவிர அரசுத் துறையின் சீனியர் செகரெட்டரிகள், இன்டர்காம் போனில்தான் அவரிடம் பெரும்பாலும் தகவல்களைப் பரிமாறுவார்கள்.

ஜெயலலிதாவின் உணவு படு நேர்த்தியாக இருக்கும். ஹோட்டலில் தங்கினாலும், பெர்சனல் குக்தான் சமைப்பார். மிகக் குறைவாக அதுவும் ரொம்ப நாகரிகமாகத்தான் சாப்பிடுவார். மதிய உணவுக்குப் பிறகு செல்லத் தூக்கம் தூங்குவதில் ஜெ-வுக்குப் பெரும்பாலும் நாட்டம் இல்லை. ஆங்கில செய்தி சேனல்களைப் பார்ப்பார். கொடநாட்டில் இருக்கும்போது வெயில் தணிந்து, குளிர் வேகமெடுக்கும் வேளையில் பேட்டரி காரில் தனது டீ எஸ்டேட்டை சுற்றிப் பார்ப்பார். வீடியோ கேமரா, மைக்,

முதல்வரின் ஒரு நாள்!

ரெக்கார்டர் என்று சகல வசதிகளும்கொண்ட கார் அது. அந்த பேட்டரி காரைத் தானே இயக்கியும் செல்வார். ஆனால், இப்போதெல்லாம் எஸ்டேட் விசிட் அடிக்கடி செல்வது இல்லை. மாறாக அந்த நேரத்தில் கொடநாடு பங்களாவின் பின் கேட்டில் இருந்து இறங்கிச் செல்லும் பாதையில் சென்றால் வரும் சிறிய ஏரியில் படகுப் பயணமோ அல்லது அதைச் சுற்றி பேட்டரி கார் பயணமோ செல்வது வழக்கமாகி இருக்கிறது. ஜெயலலிதாவுக்கு டிரைவிங்கில் அலாதி ஆர்வம். சமீபத்தில்கூட மஹேந்திராவின் புதிய எக்ஸ்.யூ.வி 500 (5 ஓஓ) காரை எஸ்டேட் பங்களாவுக்குக் கொண்டுவரவைத்து, டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தார்.

விளக்கேற்றப்படும் மாலை நேரங்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் அம்மன் பாடல்கள் அல்லது சூலமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டி கவசம் போன்றவற்றுக்குக் காது கொடுப்பது விருப்பமான விஷயம். கொடநாட்டில் ஒரு முறை நவராத்திரி கோலாகலம் கொண்டாடப்பட்டபோது ஜெயலலிதாவே பக்திப் பாடல்களை தேன் குரலில் பாடியதாக வெளியே வந்து சிலாகித்துக்கொண்டனர் பங்களா பணியாளர்கள்.

காரில் தனக்குப் பின் இருக்கையில் அமர்ந்திருக்கும் சசிகலா, எப்பொழுதும் ஒரு டைரி, பேனாவைத் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பது ஜெயலலிதாவின் கட்டளை. தான் போகும் வழியில் கவனிக்கும் முக்கியமான விஷயங்கள் பற்றிய குறிப்புகளைச் சொல்ல அதைக் கவனமாகக் குறித்துக் கொள்வார் சசிகலா. கட்சி விசுவாசிகள் சிலர் பக்கம் காரை நிறுத்தி அவர்களை அழைத்து ஜெயலலிதா விபரம் விசாரிக்க விசாரிக்க, அவை அனைத்தும் சசிகலாவால் அந்த டைரியில் குறிப்பேற்றப்படும். இப்படி சிறு குறிப்புக்கு உள்ளானதன்மூலம் கட்சியில் மிக முக்கியப் பொறுப்புகளுக்கு வந்தவர்களும் உண்டு.  

- எஸ்.ஷக்தி