Published:Updated:

எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

Published:Updated:
எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

''கேப்டன்கிட்ட இருந்து அழைப்பு வந்துச்சுனாலே, எங்களுக்குப் பயமா இருக்கும். சாயந்திரம் அஞ்சு மணிக்கு மேல வரச் சொன் னார்னா அவ்வளவுதான்... நடுங்க ஆரம்பிச்சுடுவோம். ராத்திரி எட்டு மணிக்கு வரச் சொன்னா, அய்யய்யோ செத்தேபோயிருவோம்!'' - இதுதான் இன்று தே,மு.தி.க.!

கட்சி நிர்வாகிகள் மீது தலைமை வருத்தப்படுவது, கோபப்படுவது எல்லாம் எல்லாக் கட்சிகளிலும் நடப்பவைதான். வார்த்தைகள் தடித்து, 'வெளிய போய்யா’ என்றோ, 'என் முகத்திலேயே இனிமே முழிக்காத’ என்றோ சொல்லப்படுவதும் உண்டு. ஆனால், தே.மு.தி.க-வில் இன்னும் கொஞ்சம் தாண்டி 'பஞ்ச்’, 'டிஞ்ச்’ வரைக்கும் போகும் என்று பயமுறுத்துகிறார்கள். இப்படி பயந்துபோய்த்தான் கம்பி நீட்டி உள்ளார் ஒரு எம்.எல்.ஏ. என்றும் தகவல்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விஜயகாந்தின் பால்ய காலத்துத் தோழர் அவர். இரண்டு பேருக்கும் மனவருத்தம் ஏற்பட்டது. இளைஞர்களைக் கண்டிப்பதுபோன்ற பாணி யிலேயே அவரிடமும் கேப்டன் நடந்து கொண்டார். ஒரு கட்டத்தில் அந்த எம்.எல்.ஏ. தரையில் விழுந்து எழ வேண்டியது ஆகிவிட்டது. ஏற் கெனவே இதய நோயாளியான அந்த மனிதருக்கு நெஞ்சிலும் அடிபட்டது. அதற்குப் பிறகுதான், 'இனிமே இவரு முகத்துலயே முழிக்கக் கூடாது, என்ற முடிவுக்கு வந்தார் அந்த எம்.எல்.ஏ. நண்பர். அதனால் தான் கட்சியில் இருந்தும் எஸ்கேப் ஆகும் முடிவுக்கே போனார்'' என் கிறார்கள்.

சில மாதங்களுக்கு முன் கட்சி எம்.எல்.ஏ-க்களின் கூட்டத்தைக் கூட்டினார் விஜயகாந்த். சிலர் வருவதற்குத் தாமதம் ஆனது. அப்படியே நிற்கவைத்துக் நாக்கைப் பிடுங்கிக்கொள்ளும்படி நாலு கேள்விகள் கேட்டு... வந்த வழியே ஓடவைத்தாராம் விஜயகாந்த்.

இன்னொரு எம்.எல்.ஏ, கொஞ்சம் விஷயங்களோடு பேசக் கூடியவர். சட்டசபையில் இவர் பேசும்போது, இரண்டு முறை முதலமைச்சர் ஜெயலலிதா குறுக்கிட்டுப் பதில் சொன்னார். ''இப்படி சி.எம். குறுக் கிட்டுப் பதில் சொல்லிட்டா, நீங்க என்ன அவ்ளோ பெரிய ஆளா? ஊர்ல உலகத்துல இல்லாத புத்திசாலியா?’ என்று விஜயகாந்தைச் சுற்றி இருக்கும் சிலர் அந்த எம்.எல்.ஏ-விடம் கேட்டார்களாம். ''சி.எம். பதில் சொன்னா, அது என் தப்பா?'' என்று அந்த எம்.எல்.ஏ. வருத்தப்படுகிறார்.

இப்படிப்பட்ட கறாரான நடவடிக்கைகள் காரணமாக வெளியேறுவதற்கு ஒவ்வொரு எம்.எல்.ஏ-வும் காரணம் தேடிக்கொண்டு இருந்தார்கள். மதுரை மேற்கு சுந்தர்ராஜன், திட்டக்குடி தமிழ் அழகன்,

எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தை இழப்பாரா விஜயகாந்த்?

பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன் ஆகிய நால்வரும் ஜெயலலிதாவைச் சந்தித்தார்கள். ''ஹிட்லர் ஹாஸ்டலில் இருந்து தப்பிச்சு வந்துட்டோம்'' என்று ஒரு எம்.எல்.ஏ. சொன்னாராம். அந்த அளவுக்கு விஜயகாந்தின் பிம்பம் அவர்களை மிரட்ட ஆரம்பித்து உள்ளது.

''ஒரே ஒரு எம்.எல்.ஏ. இருக்கும்போதுகூட கட்சி உற்சாகமாக இருந்தது. ஆனால், இப்போது 29 பேர் இருந்தும் நிர்வாகிகள், தொண்டர்கள் மத்தியில் உற்சாகமும் இல்லை. பெரும்பாலான நிர்வாகிகளால் விஜயகாந்தைச் சந்திக்க முடியவில்லை. அப்படியே போய்ப் பார்த்தாலும் எதற்கெடுத்தாலும் கோபப் படுகிறார். அவரிடம் எங்களால் சகஜமாகப் பழக முடியவில்லை'' என்பது முன்னணியினரின் வருத்தம். எதிர்க் கட்சித் தலைவராக ஆவதற்கு முன்பு வரை அனைத்து மாவட்டங்களுக்கும் அடிக்கடி வந்து சென்றார் விஜயகாந்த். இப்போது அவர் உள்ளூரில் இருக்கிறாரா, வெளிநாட்டில் இருக்கிறாரா என்பதே தெரியாது என்பது பலரது வருத்தம். மேலும் தொகுதி நலத்திட்டங்களை நிறைவேற்றுவதன் பெயரில் நாலு காசு சம்பாதிக்கலாம் என்பதும் எம்.எல்.ஏ-க்களின் ஆசை. அதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கிறது விஜயகாந்தின் கண்டிஷன்கள்.

தொண்டர்களுக்கும் தலைமைக்குமான இடைவெளி அதிகமாகும்போது இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடக்கும். நான்கு எம்.எல்.ஏ-க்களின் தாவலும் அப்படிப்பட்டதுதான். அவரு போறார், இவரு வர்றார் என்று தினமும் பட்டியல் வாசிப்பதே தே.மு.தி.க-வின் ஸ்திரத் தன்மையைக் குலைத்துவருகிறது.

தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை 29. தி.மு.க-வுக்கோ 23. இப்போது நான்கு எம்.எல்.ஏ-க்கள் கட்சியைவிட்டுப் பறக்கத் தயாராக இருக்கிறார்கள். இன்னும் நான்கு பேர் கேப்டனுக்கு டாட்டா சொன்னால், தி.மு.க-வைவிட, தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை குறைந்து எதிர்க் கட்சித் தலைவர் அந்தஸ்தையும் இழக்க நேரிடலாம் விஜயகாந்த்.

இந்த நிலையில், தன் தொகுதிப் பிரச்னைகளைச் சொல்வதற்காக ஜெயலலிதாவைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறார் விஜயகாந்த்.

இது நல்ல நேரமா, கெட்ட நேரமா?

- முகுந்த், படம்: பொன்காசிராஜன்