Published:Updated:

4 நாள்களில் தேர்தல்... திடீரென பாஜக-வில் இணைந்த 26 காங்கிரஸ் நிர்வாகிகள்! - பின்னணி என்ன?

பா.ஜ.க-வில் இணைந்த 26 காங்கிரஸ் தலைவர்கள்! ( ட்விட்டர் )

இமாச்சல பிரதேசத்தில், நவம்பர் 12-ம் தேதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், காங்கிரஸ் நிர்வாகிகள் 26 பேர் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தனர்.

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்றுவரும் மாநிலங்களில் ஒன்றான இமாச்சல பிரதேசத்தில், வரும் நவம்பர் 12-ம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. இதை முன்னிட்டு, ஆளுங்கட்சியான பா.ஜ.க-வும், எதிர்க்கட்சியான காங்கிரஸும் மாறி மாறித் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துவருகின்றனர். மேலும் இதில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி மாநிலம் முழுவதும் தொடர் பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

காங்கிரஸ் - பாஜக
காங்கிரஸ் - பாஜக

அதுமட்டுமல்லாமல், `நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும். ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு மகளிருக்கு மாதம், ரூ.1,500 உதவித்தொகை வழங்கப்படும்' என்று பிரியங்கா காந்தி பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுவருகிறார். இவ்வாறு தேர்தல் வேலைகளில் காங்கிரஸ் முழுவீச்சில் செயல்பட, மறுபுறம் வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாள்களே இருக்கும் நிலையில் கட்சியிலிருந்து 26 நிர்வாகிகள் நேற்று திடீரென பா.ஜ.க-வில் இணைந்திருப்பது காங்கிரஸுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பா.ஜ.க-வில் இணைந்த 26 காங்கிரஸ் தலைவர்கள்!
பா.ஜ.க-வில் இணைந்த 26 காங்கிரஸ் தலைவர்கள்!
twitter

மேலும், முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் முன்னிலையில் பா.ஜ.க-வில் இணைந்த 26 பேரில், காங்கிரஸின் முன்னாள் பொதுச்செயலாளர் தரம்பால் தாக்கூர், முன்னாள் செயலாளர் ஆகாஷ் சைனி ஆகியோரும் அடங்குவர். இப்படி வாக்குப்பதிவுக்கு சில நாள்களுக்கு முன்னர் இத்தனை பேர் திடீரெனக் கட்சி மாறியிருப்பது காங்கிரஸுக்கு தேர்தலில் பெரும் பின்னடைவு என்று கூறப்பட்டாலும், இது குறித்து காங்கிரஸ் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.