Published:Updated:

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

டிச.10,2010

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

குட்டியூண்டு வீடுகளில் வாழும் பெரும்பாலோர், 'கொஞ்சம் இடம் இருந்தா வீட்டுக்கு முன்னே ஒரு பூ செடி வைக்கலாமே...' என்று ஆதங்கப்படுவதுண்டு. மனதில் ஆசை இருந்தாலும், வீட்டில் இடமில்லையே என்று வருத்தப்படுபவர்களின் பெஸ்ட் சாய்ஸ் போன்சாய் மரங்கள்.##~~##

'வீட்டுக்குள்ளே வளர்த்துக்கலாம்... பணமும் பார்த்துக்கலாம்' என்கிறார் சுலா ஜவேரி.
பெங்களூருக்கு போன்சாய் மரங்களை அறிமுகப்படுத்தியவர். இவரது கடந்த கால வாழ்க்கை வசந்தமல்ல... புயல் என்பதையும், அதில் இருந்து மீள போன்சாய் மரங்கள் உறுதுணை புரிந்ததையும் அவரே சொல்கிறார்.

"என்னுடைய சொந்த ஊர் மும்பை. கணவருக்கு மத்திய அரசாங்க பணி என்பதால் அடிக்கடி வேலை டிரான்ஸ்பர் ஆகிடும். அப்படிதான் பெங்களூருவுக்கு வந்தேன். வந்த ரெண்டு வருஷத்திலே ஒரு விபத்துல என் கணவரும் மகனும் சிக்கி இறந்துட்டாங்க. அவ்வளவுதான் வாழ்க்கைன்னு அப்படியே இடிஞ்சி போயிட்டேன். ஏறக்குறைய மனநலம் பாதிக்கப்பட்டு நடை பிணமாகவே திரிஞ்சேன்.

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

என் மனசை மாற்றுவதற்காக ஊர் ஊரா டூர் கூட்டிட்டு போனாங்க உறவினர்கள். டெல்லியில முதன் முதலா போன்சாய் மரங்களை பார்த்து வியந்துபோனேன். எனக்கென ரெண்டு போன்சாய் மரங்களை வாங்கிட்டு வளர்த்தேன். அந்த மரங்களை என் மகனை போல கவனிச்சிட்டு வந்தேன்... அப்படியே என் மனமும், உடலும் மாறியது.

என்னை மாற்றிய போன்சாய் மரங்கள் மீது எனக்கு பெரிய மரியாதையே வந்திடுச்சு. அதனால 1990-ல்

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

ஆறு பெண்கள் சேர்ந்து, 'விரிக்ஷா' என்ற பெயரில் போன்சாய் கிளப் ஆரம்பித்தோம். ஆறே மாதங்களில் இருபது பெண்கள் சேர்ந்தாங்க. போகப்போக போன்சாய் மரங்களை பற்றிய விழிப்பு உணர்வு நிகழ்ச்சிகளும் கண்காட்சியும் நடத்த ஆரம்பிச்சோம்.

இப்போது இந்த கிளப்பில் 160-க்கும் மேற்பட்ட பெண்கள் இருக்காங்க. இப்போ ஆண்களும் உறுப்பினர்களாக இருக்காங்க.

போன்சாய் மரங்களை சிலர் இயற்கைக்கு எதிரானதுன்னு நினைக்கிறாங்க, அப்படியில்ல. போன்சாய்

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

மரங்கள் மூலமா ஒளிச்சேர்க்கை செய்ய முடியும், சுத்தமான ஆக்ஸிஜனை உண்டாக்க முடியும், மழை தர முடியும். மற்ற சாதாரண மரங்களைப் போலவே காய், கனி, பூவும் தரமுடியும்... அதனால இவற்றை வியாபாரம் செய்து பணமும் பார்க்க முடியும்," என்கிறார் சுலா ஜவேரி.

போன்சாய் கிளப்பின் தலைவராக இருக்கும் லதா ராவ், "போன்சாய் மரங்களை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் நிறைய செலவாகும் என நினைக்கிறார்கள். சாதாரண மரங்களுக்கு செலவிடும் நேரத்தை விடவும் பணத்தை விடவும் இதற்கு குறைவுதான். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சில மரங்கள் முற்றிலுமாக அழிந்து போகும் அபாயம் உள்ளது. எனவே அவற்றைப் பாதுகாக்க போன்சாய் மரங்கள்தான் சரியான சாய்ஸ்," என்கிறார்.

புத்துயிர் தந்த போன்சாய் மரங்கள்!

போன்சாய் மரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என்கிறார் விரிக்ஷா போன்சாய் கிளப் உள்ள தமிழரான உமா பாண்டியன். "போன்சாய் மரங்களின் மூலம் லட்ச கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆனால் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் கழித்துதான் போன்சாய் முழு வடிவம் பெறும் என்பதால் அதுவரை காத்திருக்க வேண்டும். 1000 ரூபாய் முதல் 5 லட்சம் வரை கூட போன்சாய் மரங்களை விற்கின்றனர்.

இப்போது டெல்லி, மும்பை, ஹைதராபாத் போன்ற இடங்களில் போன்சாய் விற்பனை நல்ல லாபகரமாக இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஓய்வு நேரங்களில் போன்சாய் வளர்ப்பில் ஈடுபட்டால்... நல்ல வருமானத்தோடு, மனம் நிறைய மகிழ்ச்சியையும் சம்பாதிக்கலாம்," என்கிறார்.

-இரா.வினோத்

அடுத்த கட்டுரைக்கு