Published:Updated:

26/11.. மதவாத அரசியல் செய்தது காங்.:விக்கிலீக்ஸ்

26/11.. மதவாத அரசியல் செய்தது காங்.:விக்கிலீக்ஸ்

வாஷிங்டன், டிச.11,2010

கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த மும்பை தாக்குதலுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைவர்களில் சிலர் மதவாத அரசியலைச் செய்ததாக, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் பரிமாறிய தகவலை 'விக்கிலீக்ஸ்' மேற்கோள்காட்டியிருக்கிறது.

அமெரிக்க தூதரகங்களால் வாஷிங்டனுக்கு பகிரப்பட்ட ரகசிய ஆவணங்களை தவணை முறையில் தினமும் தனது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது, விக்கிலீக்ஸ் புலனாய்வுத் தளம். ##~~##

அந்த வகையில், மும்பை தாக்குதலின் போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பகிரப்பட்ட ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெள்ளிக்கிழமை கசியவிட்டது.

அதில் 26/11 சம்பவத்துக்குப் பிறகு, இந்திய அரசியல் சூழல் தொடர்பான ரகசியங்களை,  அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் டேவிட் முல்ஃபோர்டு டிசம்பர் 23,2008 தேதியில் வாஷிங்டனுடன் பகிர்ந்துள்ள விவரம் விரிவாக இடம்பெற்றுள்ளது.

மும்பை தாக்குதலில் இந்துத்துவ சக்திகளுக்கு தொடர்பு இருக்கக்கூடும் என அப்போதைய சிறுபாண்மை விவகாரத்துறை அமைச்சர் ஏ.ஆர்.அந்துலே குற்றம்சாட்டியிருக்கிறார். முதலில் அதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்ட காங்கிரஸ், பின்னர் அந்த விவகாரத்தை தேர்தலில் வாக்கு வங்கிக்காக பயன்படுத்தி அரசியல் செய்தது என்று முல்போர்டு குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பான விக்கிலீக்ஸ் ஆவணத்தின் பக்கம் இதோ... CONGRESS PARTY STUNG PLAYING RELIGIOUS POLITICS : WIKILEAKS