Published:Updated:

'2ஜி' ராடியா.. புதிய ஆடியோ டேப்புகள்; பகீர் தகவல்கள்!

Vikatan Correspondent

டிச.11,2010

"தொலைத் தொடர்பு அமைச்சராக ஆ.ராசாவை வைப்பதே நல்லது. என்னை நம்புங்கள். அவர்..." ##~~##

"ராசா வரவேண்டும் என்பதே கருணாநிதியின் விருப்பம். ஏனெனில், அவர் ஒரு தலித். முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு அமைச்சரவையில் கூடாது என்பது மட்டுமே பிரதமரின் வலியுறுத்தல்.."

"கருணாநிதி முழுமையான குழுப்பவாதி."

"பிரதமரும் கனிமொழி மூலமாகவே பேசுகிறார்."

"அழகிரியுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்று கனிமொழியிடம் சொல்லுங்கள்."

இவை அனைத்தும் லாபியிஸ்ட் நீரா ராடியா எதிர்முனையில் இருந்தவர்களிடம் தொலைபேசியில் பகிர்ந்து கொண்டதன் சில துளிகள்.

ஆ.ராசா, கனிமொழி, ரத்தன் டாடா, வீர் சிங்வி, பர்க்கா தத் உள்ளிட்டோருடன் நீரா ராடியா உரையாடியவை ஊடகங்கள் மூலமாக ஏற்கெனவே கசிய விடப்பட்டது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. புலனாய்வு செய்து வரும் நீரா ராடியா ஆடியோ டேப்புகளின் 5,800 உரையாடல்களை அலசி ஆராய்ந்து வருகிறது.

அவற்றில், 140 உரையாடல்கள் ஏற்கெனவே மக்கள் மேடையில் கசிய விடப்பட்ட நிலையில், அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு நபர்களுடன் நீரா ராடியா பேசிய 800 உரையாடல்களை 'அவுட்லுக்' இதழ் தற்போது வெளியிட்டுள்ளது.

தமிழக முதல்வருக்கு உறவுகளால் விடுக்கப்பட்ட 'எமோஷனல் மிரட்டல்' உள்பட பகீர் விவகாரங்கள் இந்த கசிவுகளில் இடம்பெற்றுள்ளனவாம்.

அதில் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.) முன்னாள் தலைவர் தருண் தாஸ், அடையாளம் காணப்படாதவர், தனது சக ஊழியர் மனோஜ் வாரியார் மற்றும் பத்திரிகையாளர் வீர் சிங்வி ஆகிய நால்வரிடமும் நீரா ராடியா உரையாடிவை இங்கே ஆடியோ வடிவில்... (நன்றி: அவுட்லுக்)

தருண் தாஸ் - நீரா ராடியா

xxxxxxx - நீரா ராடியா

மனோஜ் வாரியார் - நீரா ராடியா

வீர் சிங்வி - நீரா ராடியா

மேலும் ஆடியோ டேப்புகள்...  800 New Radia Tapes