Published:Updated:

வாஜ்பாயை போன்று மோடி: அத்வானி திடீர் புகழாரம்

மும்பை: அடல் பிகாரி வாஜ்பாய் போன்று மோடியும் நாட்டில் வளர்ச்சியை ஏற்படுத்துவார் என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி புகழ்ந்து பேசினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அகமத்நகரில் தனது முதல் பிரசார கூட்டத்தில் பேசிய அத்வானி, நாட்டில் மாற்றம் கொண்டுவர பாரதிய ஜனதா வேட்பாளர் நரேந்திர மோடிக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

குஜராத் மாநிலத்தில் விவசாயம், தொழில்துறை, கல்வி உள்ளிட்டவற்றில் மோடி வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக புகழ்ந்து பேசினார்.

இந்தியா, இதுவரை கண்ட பிரதமர்களில் மன்மோகன் மிகவும் பலவீனமானவர் என்று மீண்டும் விமர்சித்த அத்வானி, எந்தவித அதிகாரமும் இன்றி மன்மோகன் பிரதமராக பதவி வகித்து வருவதாக தெரிவித்தார்.