Published:Updated:

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

Published:Updated:
மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

கன்னியாகுமரி: மோடியின் ஆட்சியில் குஜராத் வளர்ச்சி பெறவில்லை; மோடியும் வளர்ச்சி நாயகன் அல்ல என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தக்கலையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய  ஜி.ராமகிருஷ்ணன், ‘‘அ.தி.மு.க.வோடு உறவை முறித்துக்கொண்ட நிலையில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து தேர்தலை சந்திப்பதுதான் நமது பலம். தி.மு.க.வோடு இணைந்திருந்தால் 2ஜி அலைக்கற்றை ஊழலைப் பற்றி பேசமுடியாமல் போயிருக்கும்.

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

தி.மு.க.வுக்கு மாற்று அ.தி.மு.க. காங்கிரசுக்கு மாற்று பி.ஜே.பி. இவர்கள் அனைவருக்கும் மாற்று நாங்கள்தான். அதை யாராலும் மாற்ற முடியாது. சில்லரை வர்த்தகத்தை 2002ல் வாஜ்பாய் அரசு முன்மொழிந்தது. 2012ல் மன்மோகன் அதை அமலாக்கி நமது பொருளாதாரத்தை நாசமாக்கிவிட்டார்கள். அன்று சில்லரை வர்த்தகத்தை ஆதரித்த கருணாநிதி, இன்று மாற்றிப்பேசுகிறார், யாரை ஏமாற்றப்பார்க்கிறாரோ..?

இன்று மீத்தேன் எரிவாயு திட்டத்தை எதிர்த்து விவசாய நிலத்தை காப்பாற்ற விவசாயிகள் போராடுகிறார்கள் அதற்கு ஆதரவு குரல் தருகிறது தி..மு.க. மீத்தேன் எரிவாயு திட்டத்திற்கு கையெழுத்திட்டவரே அப்போதைய துணை முதல்வராக இருந்த ஸ்டாலின் தான். தந்தையும், மகனும் யாரை ஏமாற்ற நடிக்கிறார்களோ? இது எல்லாம் தமிழ்க மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

மோடி வளர்ச்சி நாயகன் அல்ல: ஜி.ராமகிருஷ்ணன் சொல்கிறார்!

இது தமிழ்நாட்டில் என்றால் வடக்கே வளர்ச்சியின் நாயகன் என்று நடித்து வருகிறார் மோடி. 2000ஆம் ஆண்டு குஜராத் 4வது இடத்தில் இருந்தது. மோடி ஆட்சியில் 8வது இடத்திற்கு தள்ளப்பட்டு விட்டது. மற்ற மாநிலங்களில் முறைசாரா தொழிலாளர்களுக்கு சராசரியாக நாள் ஒன்றுக்கு ரூ.469 சம்பளம். ஆனால் குஜராத்திலோ ரூ.376 தான். விவசாயிகளுக்கு மற்ற மாநிலத்தில் கூலி 230, குஜராத்திலோ 166. இதுதான் குஜராத்தின் வளர்ச்சியா?

குஜராத்தின் வளர்ச்சி என்பது கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிதானே தவிர குஜராத் குடிமக்களின் வளர்ச்சியல்ல. மோடியும் வளர்ச்சியின் நாயகனும் அல்ல. ஆகவே, காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சி இனி இந்தியாவில் அமைந்து விடக்கூடாது. பா.ஜ.க.வையும், மோடியையும் விமர்சிக்காமல் அவர்களுக்கு மறைமுக ஆதரவு தரும் அ.தி.மு.க.வையும் இந்தத் தேர்தலில் தோற்கடிப்பது நமது கடமை. எனவே, குமரி தொகுதி மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மினுக்கு உங்கள் வாக்குகளை அளித்திடுங்கள்’’ என்றார்.

ச.காளிராஜ்

படங்கள்: ரா.ராம்குமார்