Published:Updated:

மோடி பிரதமரானால் விசாவுடன் தூதரக பாதுகாப்பு: அமெரிக்கா அறிவிப்பு!

வாஷிங்டன்: நரேந்திர மோடி பிரதமரானால் விசாவுடன், தூதரக பாதுகாப்பும் அளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

2002ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரத்தைத் தொடர்ந்து அம்மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு கடந்த 9 ஆண்டுகளாக அமெரிக்கா விசா வழங்க மறுத்து வந்தது.

இந்நிலையில் மோடி பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் மோடி அதிக செல்வாக்கு இருப்பதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்தள்ளது.

இந்நிலையில், ''இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி வெற்றி பெற்று பிரதமரானால், அவருக்கு அமெரிக்காவின் ஏ-1 விசா பெறுவதற்கான தகுதி வந்து விடும். அதேபோல், அயல்நாட்டு தலைவர் என்ற முறையில் அவர் அமெரிக்கா வரும்போது உரிய தூதரக பாதுகாப்பும் வழங்கப்படும்'' என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது.