Published:Updated:

தஞ்சை, வேலூர் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

சென்னை: தஞ்சை மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில், தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க., கொ.ம.தே.க., ஐ.ஜ.க. போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள பா.ஜ.க. 8 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இதில் 6 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஏற்கனவே பா.ஜ.க. தலைமை அறிவித்து விட்டது. இந்நிலையில், தஞ்சாவூர் மற்றும் வேலூரில் போட்டியிடும் வேட்பாளர்களை இன்று அறிவித்துள்ளது.

அதன்படி, தஞ்சாவூர் தொகுதியில் கருப்பு முருகானந்தமும், வேலூர் தொகுதியில் புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகமும் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய நீதிக்கட்சியின் தலைவரான ஏ.சி.சண்முகம், பா.ஜ.க.வின் தாமரை சின்னத்திலேயே போட்டியிடுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.